பாபநாசம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்
பாபநாசம் அருகே கபிஸ்தலத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம்.
மாநில, மாவட்ட நிர்வாகிகள் பலர் பங்கேற்பு

தஞ்சாவூர் மேற்கு மாவட்டம் பாபநாசம் தொகுதியில் எழுச்சித்தமிழர் பிறந்தநாள் விழா நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் பாபநாசம் அருகே கபிஸ்தலம் தனியார் திருமண மண்டபத்தில் தஞ்சை மேற்கு மாவட்ட செயலாளர் ச.தமிழன் தலைமையில் நடைபெற்றது.
வருகின்ற ஆகஸ்ட் 17ம் தேதி விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவரும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் அவர்களின் பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில்தொல் திருமாவளவன் அவர்களின் பிறந்த நாளை தஞ்சை மேற்கு மாவட்டத்தில் எவ்வாறு கொண்டாடுவது என்பது குறித்து நிர்வாகிகளுடன் கலந்தாய்வு கூட்டம் மேற்கொள்ளப்பட்டது.
மேலும் மாற்று கட்சியினர் 50 க்கும் மேற்பட்டோர் விசிக கட்சியில் இணைந்தனர்இக்கூட்டத்தில் 2024 ல் நடைப்பெறக்கூடிய பாராளுமன்றத் தேர்தலை பூத்கமிட்டி அமைப்பது மற்றும் தேர்தல் பணிகள் செய்வது தொடர்பான ஆலோசனை குறித்தும் எழுச்சி தமிழர் பிறந்தநாளை கொண்டாடுவது சம்பந்தமாகவும் ,
தஞ்சை மேற்கு மாவட்ட தொகுதியான பாபநாசம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிளை பகுதிகளில் கல்வெட்டுடன் கொடிகம்பம் அமைப்பது , பள்ளிக்கூடம்,ஏழை , எளியோர் மற்றும் மாற்று திறனாளிகளுக்கு நலதிட்ட உதவிகள் வழங்கதல் என பல்வேறுதீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக புதுக்கோட்டை, தஞ்சை மண்டல செயலாளர் சதா.சிவக்குமார்,புதுக்கோட்டை, தஞ்சை மண்டல துணை செயலாளர் முருகதாஸ்,முன்னாள் செயலாளர் சா.விவேகானந்தன் ,முன்னாள் மாவட்ட செயலாளர் உறவழகன்ஆகியோர் கலந்து கொண்டு பிறந்தநாள் விழா குறித்து ஆலோசனைகள் வழங்கினர்.
மேலும் இந்நிகழ்ச்சியில் மாநில,மாவட்ட, ஒன்றிய,நகர, முகாம் பொறுப்பாளர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.