நாமக்கல்
பிரணவ் சொல்யூசன் நிறுவனத்துடன் நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் முத்தாயம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்
இராசிபுரம்- வநேத்ரா முத்தாயம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் இயற்பியல் துறையானது, கிருஷ்ணகிரியில் இயங்கி வரும் ‘பிரணவ் சொல்யூசன்’ நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது.
இந்நிகழ்ச்சியானது முத்தாயம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் வளாகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் 'பிரணவ் சொல்யூசன்' நிறுவனத்தின் சார்பாக அந்நிறுவன மேலாண்மை இயக்குநர் பொறியாளர். ஆர். இளவரசன் முத்தாயம்மாள் கலை மற்றும் அறிவியல்
கல்லூரியின் சார்பில் முதல்வர் முனைவர் எஸ்.பி.விஜயகுமார் , இயற்பியல் துறையின் துறைத்தலைவர் முனைவர் எம். ரேவதி ஆகியோர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
கல்லூரயின் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தித் துறை புலமுதன்மையர் முனைவர் எம். சுதாகர் மற்றும் இயற்பியல் துறை உதவிப் பேராசிரியர் வி.சதீஸ்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் வாயிலாக கல்லூரி மாணாக்கர்களுக்கு இன்டர்ன்ஷப், பணிக்கான வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் வேலைவாய்ப்புகள் குறித்த தகவல் தொழில்நுட்ப பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது குறிப்படத்தக்கது.