திருக்கோவிலூர்
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவலூரில் நடைபெற்று வரும் என்.சி.பி.எச். புத்தகக் கண்காட்சியில் இன்று திருக்கோவலூர் கோவல் தமிழ்ச் சங்கம் சார்பில் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.
பாவலர், சிங்கார உதியன் தலைமையில், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற மாவட்டத் தலைவர் மு.கலியபெருமாள், கவிஞர் உலகமாதேவி, ஆகியோர் முன்னிலையில், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்ட நூலக அலுவலர் மு.காசிம் கவிஞர் அருள்நாதன் தங்கராசு எழுதிய சமுதாய சிற்பி கலைஞர், எழுத்தாளர் துரைமலையமான் எழுதிய கலைஞரின் திரைப்படப் பாடல்கள் ஆகிய நூல்களை வெளியிட்டுப் பாராட்டிப் பேசினார்.
என்.சி.பி.எச். மேலாளர் எஸ்.முருகேசன் வரவேற்றார்.
வேட்டவலம் தமிழ்ச் சங்க செயலாளர் தங்க விசுவநாதன், ஒய்வு பெற்ற தலைமையாசிரியர் சு.தயானந்தன், ஆகியோர் நூல்களை ஆய்வு செய்து பேசினர்.
ராதா, பாபு, சம்பத் ஆகியோர் விழாவை ஒருங்கிணைத்தனர்.