தேனி மாவட்டம் பெரியகுளம் வறட்டாறு பகுதியை அடுத்த தனியார் திருமண மண்டபத்தில் பெரியகுளம் சட்டமன்றத் தொகுதி திமுக பிஎல்எ-2வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் தேனி வடக்கு மாவட்ட செயலாளர் தங்கத்தமிழ் செல்வன் கலந்து கொண்டு இந்தியாவிலேயே சிறந்த முதல்வராக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பணியாற்றி வருகிறார்

என்றும், மணிப்பூர் கலவரத்தில் அப்பாவி மக்கள் பாதிக்கப்பட்டும் இன்றுவரை பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்றம் வராததை கண்டித்தும் இந்தியா கூட்டணி நாடு முழுவதும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு புதுவை உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் திமுக தலைமையிலான கூட்டணி மகத்தான வெற்றி பெறகட்சியினர்

பாடுபட வேண்டும் எனவும் அதற்கு முன்னோட்டமாக ஆகஸ்ட் 17ம் தேதி ராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெறும் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையில் -வாக்குச்சாவடி முகவர்களுக்கான ஆலோசனை கூட்டத்தில் திரளாக பங்கேற்ப்பது நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவது குறித்து வாக்குச்சாவடி முகவர்களுக்கான ஆலோசனைகளை வழங்கினார்.

நிகழ்வில் தெற்கு ஒன்றிய செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான கே.எஸ். சரவணகுமார்
வடக்கு ஒன்றியசெயலாளர் எல்.எம்.பாண்டியன்
பெரியகுளம் ஒன்றிய குழு பெருந்தலைவர் தங்கவேல் திமுக
நகர்மன்ற தலைவர் சுமிதாசிவக்குமார்,
தேனி நகர செயலாளர் நாராயண பாண்டியன்,
தேனி நகர்மன்ற தலைவர் ரேணுபிரியா பாலமுருகன், பெரியகுளம் நகர செயலாளர் கே முகமது இலியாஸ் தென்கரை பேரூராட்சி தலைவர் நாகராஜ்,பேரூர் செயலாளர் பாலமுருகன்,தாமரைக்குளம் பேரூராட்சி தலைவர் பால்பாண்டி,பேரூர் செயலாளர் கருத்தராசு,வடுகபட்டி பேரூராட்சி தலைவர் நடேசன்,பேரூர் செயலாளர் காசி விஸ்வநாதன், தேவதானப்பட்டி பேரூராட்சி தலைவர் முருகேஸ்வரி ராமையா, -பொதுக்குழுஉறுப்பினர் கண்ணையா, கீழவடகரை ஊராட்சி மன்ற தலைவர் செல்வராணி செல்வராஜ்,நகர்மன்ற, பேரூராட்சி, மன்ற ஒன்றிய குழு உறுப்பினர்கள்,உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள்,மாவட்ட, ஒன்றிய,நகர,வார்டு நிர்வாகிகள், வாக்குச்சாவடி முகவர்கள் திமுக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *