புளியம்பட்டி ஊராட்சியில் 75 -வது சுதந்திர திருநாளை முன்னிட்டு அமுத பெருவிழா கூடுதல் மாவட்ட ஆட்சித் தலைவர் வந்தனா கார்க் 3000-பண விதைகளை நட்டு துவக்கி வைத்தார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் ஒன்றியம் புளியம்பட்டி ஊராட்சியில் 75 -வது சுதந்திர திருநாளை முன்னிட்டு அமுத பெருவிழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவரும் தொழில் அதிபருமான எஸ்.ஆர். ரங்கநாதன் தலைமையில் கிருஷ்ணகிரி கூடுதல் மாவட்ட ஆட்சித் தலைவர் வந்தனா கார்க் கலந்து கொண்டு 75 மரக்கன்றுகள் மற்றும் 3000 பண விதைகள் நட்டு துவக்கி வைத்தார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சையத் பையாஸ் அகமது, செந்தில், உதவி பொறியாளர் பெரியசாமி, பணி மேற்பார்வையாளர் திருவேங்கடம் உள்பட விவேகானந்தன், கணேசன், சேகர், ஒப்பந்ததாரர் மகேந்திரன் ஆகியோர் கலந்துகொண்டு பண விதைகளை நட்டனர். ஊராட்சி செயலாளர் சிவசங்கர் நன்றி கூறினார்.