சோழவந்தான்
மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சியில் மாநில நிதி குழ மான்ய திட்டத்தின் கீழ் 2..கோடி, மதிப்பீட்டில் புதிய பேரூந்து நிலையம் மற்றும் வணிக வளாக கட்டிடம் கட்டப்பட்டு கடந்த மூன்றாண்டுகளுக்கு மேலாக திறப்பு விழா காணாமல் காட்சிபொருளாக இருந்து வரும் நிலையில் பேரூந்து நிலையத்தி ன்னுள்ளே கீழ்.மேல் தளங்களை கொண்ட மொத்தமுள்ள 23 கடைகள் மற்றும் ஹோட்டல் உள்ளிட்ட கடைகளை வைப்பு தொகையுடன் கூடிய மாதாந்திர வாடகைகான.
பொது ஏலம் கடந்த மே மாதம் பேரூராட்சி செயல் அலுவலரின் முன்னிலையில் ஏலம் விடப்பட்டது.அப்போது நடந்த பொது ஏலத்தில் 11.கடைகள் மட்டுமே பொதுமக்களால் ஏலம் எடுக்கப்பட்டது மீதமுள்ள. 13 கடைகளூக்கான ஏலம் நேற்று பேரூராட்சி அலுவலகத்தில் செயல் அலுவலர் சகாய அந்தோணி யூசின் முன்னிலையில் நடந்துபோது 9.,மற்றும் 20.எண்ணுள்ள இரண்டு கடைகள் மட்டுமே ஏலம் போனது. மீதமுள்ள கீழ் தளத்தில் 3.மற்றும் 12.எண்கடைகளும் மேல் தளத்தில் 13.14.15..16.17..21 22.23..ஆகிய எண்ணுள்ள..கடைகளை ஏலத்தில் எடுக்க. யாரும் முன் வராததால் இரண்டாவது முறையாக பேரூராட்சி பேருந்துநிலையத்தில் உள்ள வணிக வளாக கடைகள் ஏலம் போகாமல் தேக்க மடைந்துள்ளது.
ஏலம் போகாத கடைகளுக்கான மறு ஏலம் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என. செயல் அலுவலர் சகாய அந்தோணி யூசின்.தெரிவித்தனர்.அப்போது இளநிலை உதவியாளர் கண்ணம்மாள். மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் உடனிருந்தார்.