ஜே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர்

நன்னிலம் வட்டம் மத்திய பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற “மாபெரும் தமிழ்க் கனவு” நிகழ்ச்சி


திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டம், மத்திய பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற “மாபெரும் தமிழ்க் கனவு” நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர்.தி.சாருஸ்ரீ பங்கேற்றார்
நிகழ்ச்சியில் ஊடகவியலாளர் செந்தில்வேல் அவர்கள் “மெய்ப்பொருள், கான்பது அறிவு” என்ற தலைப்பில் சொற்பொழிவாற்றினார்.

அதனைத் தொடர்ந்துமாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மாபெரும் தமிழ் கனவின் நிகழ்ச்சியில் நிகழ்ச்சி ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படவேண்டும் என உத்தரவிட்டுள்ளார்கள். அதனடிப்படையில், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி இந்தாண்டு இந்நிகழ்வானது ஜூலை மாதம் தொடங்கியது.

உலகில் செழிந்தோங்கிய பண்பாடுகளில் முதன்மையான தமிழ் பண்பாடுகளின் பெருமையினையும், வளமையினையும் அம்மொழி எதிர்கொண்ட சவால்களை மாணவ, மாணவியர்களுக்கிடையே கொண்டு சேர்ப்பதே நிகழ்வின் நோக்கமாகும். நமது பண்பாட்டின் பெருமையினை இளைய தலைமுறையினருக்கு, குறிப்பாக கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு உணர்த்துவது ஆரோக்கிய எதிர்கால சமுதாயத்தின் முக்கியமான பகுதியாகும். எனவே, தமிழ்நாடு முழுவதும் உள்ள 200 கல்லூரிகளில் தமிழ் மரபும், நாகரிகமும், சமூக நீதி, பெண்கள் மேம்பாடு, தொல்லியல் ஆய்வுகள், தமிழ்நாட்டின் வளர்ச்சி, கல்வி புரட்சி, அரசின் திட்டங்கள் ஆகியவற்றை செயல்படுத்தும் முறைகள் முதலிய தலைப்புகளின் கீழ் சிறந்த சொற்பொழிவுகளை கொண்ட மாபெரும் தமிழ் கனவு சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.
நிகழ்ச்சியில் பங்குபெறும் மாணவ, மாணவியர்களுக்கு உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு குறித்த வழிகாட்டி புத்தகம், தமிழ் பெருமிதம் குறித்த கையேடு வழங்கப்பட்டுள்ளது. இந்த புத்தகங்களை படித்து மாணவ, மாணவியர்கள் பயன்பெறவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். மேலும், இங்கு வழங்கப்படும் சொற்பொழிவுகளை கேட்டு பயன்பெற வேண்டும். கேட்பதோடு மட்டுமில்லாமல் சொல், செயல், சிந்தனை ஆகியவற்றை உள்வாங்கிக்கொண்டு அதற்கு ஏற்றவாறு செயல்பட்டு வாழ்க்கையில் முன்னேற வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன் என மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ கல்லூரி மாணவ, மாணவியர்களிடம் தெரிவித்தார்.
மேலும், நிகழ்ச்சியில் சொற்பொழிவாளராக, ஊடகவியலாளர் செந்தில்வேல் பங்கேற்று மாணவ, மாணவியர்களுக்கு வழங்கிய சொற்பொழிவில் சில
சாக்ரடீஸ் ஒரு நாள் வீதியில் நடந்து வந்து கொண்டிருக்கும் போது, அந்தவழியில் வந்த இளைஞரை நிறுத்தி அழகு என்பது எது என்கிறார். அதற்கு அந்த இளைஞர், அங்குள்ள பூந்தோட்டியினை நினைவில் நிறுத்தி, அழகு என்பது அழியாமல் உள்ளது, எப்போதும் ஆனந்ததினை தரகூடியது என்கிறார். சாக்ரடீஸ் உடனே அங்குள்ள பூந்தோட்டத்தினை உடைத்துவிட இப்போது அழகு என்பது எது, என்கிறார் அந்த இளைஞரிடம் பதில் இல்லை. சாக்ரடீஸ் கூறுகிறார், அழகு என்பது இவையெல்லாம் அல்ல அழகு என்பது அறிவு, அறிவே அழகு, அறிவாயுதம் ஏந்துக்கள் அதுவே அணையாத விளக்கு என்ற வார்த்தையினை மெய்பிக்கும் அடிப்படையில் தமிழ்நாடு அரசானது மாணவ, மாணவியர்களுக்கு மாபெரும் தமிழ் கனவு என்னும் தலைப்பில் சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடத்திவருகிறது.
தற்பொழுது பல்வேறு இடங்களில் மேற்கொள்ளப்பட்டுவரும் ஆய்வுகள் தமிழரின் பெருமையினை பறைசாற்றுக்கிறது. நற்றினை, குறுந்தொகை உள்ளிட்ட எட்டுத்தொகை நூல்களும், பத்துப்பாட்டு நூல்களும், சங்க இலக்கியங்கள் உள்ளிட்ட பல்வேறு காப்பியங்கள் நம்மிடம் வலுப்பெற்று இருந்தன. காலத்தின் வளர்ச்சிக்கேற்ப பெண்கள் முன்னேறி கொண்டே வருவது நமது நாட்டில் மட்டும் தான். நீங்கள் கல்வி கற்பதற்கு வழிவகுத்த. பாதை நமது முதல்வர்கள் அமைந்து கொடுத்தது என கல்லூரி மாணவர்களுக்கு தமிழ் பெருமையும், நடப்பு நிகழ்வுகள் என மேற்காணும் மெய்,பொருள், கான்பது அறிவு தலைப்பின் கீழ் சொற்பொழிவாற்றினார்.
அதனைத் தொடர்ந்து, கல்லூரி மாணவ மாணவியர் களுக்கிடையே சொற்பொழி வாளர்களிடம் கேட்கப்பட்ட கேள்விகளில், சிறந்த கேள்வி கேட்ட சிறந்த கேள்வியாளர் மற்றும் சிறந்த பேச்சாளர்களுக்கு பரிசளிப்பு மற்றும் பாராட்டு சான்றிதழ் மாவட்ட ஆட்சியர் அவர்களால் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில், மத்திய பல்கலைக்கழக பதிவாளர் பேராசிரியர். இரா.திருமுருகன், திருவாரூர் வருவாய் கோட்டாட்சியர் சங்கீதா முதன்மை கல்வி அலுவலர் புகழேந்தி, உதவி இயக்குநர், திறன் பயிற்சித்துறை செந்தில்குமாரி, முதன்மை வங்கி மேலாளர் செந்தில் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கல்லூரி மாணவ. மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *