பாபநாசம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்
பாபநாசத்தில் மணிப்பூர் பெண்களுக்கு எதிராக தொடரும் வன்முறையை கண்டித்து கிறிஸ்தவர்கள் கண்டன பேரணி..

மத்திய அரசை கண்டித்து கருப்பு பேஜ் அணிந்து கண்டன ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்..
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் கீழ வீதியில் இருந்து முக்கிய வீதிகளின் வழியாக நூற்றுக்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள், மணிப்பூரில் நடைபெற்று வரும் கொடூர சம்பவங்களுக்காக மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களிட்டு, கருப்பு பேஜ் அனிந்தவாறு பாபநாசம் புனித செபஸ்தியர் வளாகத்தை வந்தடைந்தனர்.
அதனைத் தொடர்ந்து மணிப்பூரில் இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், மணிப்பூரில் பெண்களுக்கு இழைக்கப்பட்ட கொடூரத்தை கண்டித்தும், தலித் கிறிஸ்தவர்களை எஸ்.சி. பட்டியலில் உடனடியாக சேர்த்திட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் ஆண்கள் பெண்கள் என 100க்கும் மேற்பட்டவர்கள் கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இப்போராட்டத்திற்கு கும்பகோணம் மறைமாவட்ட முதன்மைகுரு அமிர்தசாமி தலைமை வகித்தார்.
பாபநாசம் புனித செபஸ்தியர் ஆலயத்தின் இணை பங்கு தந்தை தார்த்தீஸ் வரவேற்று பேசினார்.
இந்நிகழ்ச்சியில் கல்வி இயக்குனர் கென்னடி, பல்நோக்கு சமூகபணி இயக்குனர் ராஜேஸ், வேந்தர் பெல்பிட்,
ஆயரின் செயலர் சௌரிராஜ், கும்பகோணம் சமூக ஆர்வலர் தமிழன், பெண்கள் பணிக்குழு பொறுப்பாளர்கள் ஷெர்லி ஆண்டனி, மரியபுஷ்பம் ஆசிரியர் வின்சென்ட், பாபநாசம் சமூக ஆர்வலர் ச.தமிழன் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினர்.
இப்போராட்டத்தில் பாபநாசம், ராஜகிரி, பண்டாரவாடை , கோவில் தேராயன்பேட்டை, புலிமங்கலம் பொன்மான்மேய்ந்த நல்லூர், கருப்பூர், மேலசெம்மங்குடி, ஒன்பத்து வேலி ஆலத்தூர், வீரமங்கலம் ஆகிய ஊர்களிலிருந்து கலந்து கொண்டனர்.