ஜே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர்
திருவாரூர் அரசு உதவி பெறும் வா சோ ஆண்கள் மேல்நிலைப் பள்ளி சார்பில் ஜெனிவா தினா ஒப்பந்த விழா திருவாரூர் வ.சோ.ஆண்கள் அரசு உதவிபெறும் மேல்நிலை பள்ளியில் ஜெனிவா ஒப்பந்த தின விழா கொண்டாடப்பட்டது.
விழாவின் துவக்கமாக ஜீ.ஆர்.எம் கல்வி முகவான்மையின் நிர்வாக பிரதிநிதி தணிக்கையாளர் ஶ்ரீராம் ரெட் கிராஸ் நிறுவனர் படத்தை திறந்து வைத்து சிறப்பு உரையாற்றினார். திருவாரூர் மாவட்ட இந்தியன் ரெட் கிராஸ் கிராஸ் சொசைட்டி செயலர் ஐயா ஜே. வரதராஜன் முன்னிலை வகித்தார்
பள்ளியின் தலைமை ஆசிரியர் தியாகராஜன் மாணவர்களுக்கு ஜெனிவா ஒப்பந்த தினம் பற்றி எடுத்துரைத்தார். பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் முருகேசன் ஜெனிவா ஒப்பந்தம் பற்றி விளக்கி கூறினார்.
பள்ளியின் உதவித்தலைமை ஆசிரியரும் தேசிய மாணவர் படை அலுவலரும் சதீஷ்குமார் ரெட் கிராஸ் குறித்தும் ஜெனிவா ஒப்பந்தம் குறித்தும் மாணவர்ளிடம் விளக்க உரையாற்றினார்
விழாவில் ஜூனியர் ரெட் கிராஸில் சிறப்பாக செயல்பட்ட மாணவர்களுக்கு பரிசுகள் புத்தகங்கள் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை திருவாரூர் மாவட்ட ரெட் கிராஸ் ஒருங்கிணைப்பாளர் ஆர் செந்தில்குமார் செய்திருந்தார். முன்னதாக ஜே.ஆர்.சி ஆலோசகர் வேங்கடகிருஷ்ணன் வரவேற்றார் நிகழ்வின் இறுதியாக ஜே ஆர் சி ஆலோசகர் எல் பாரதி நன்றி கூறினார்