பொன்னேரி முத்துமாரியம்மன் கோவிலில் அதிமுகவினர் அன்ன தானம்.
திருவள்ளூர்
பொன்னேரி முத்துமாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடை பெறுவதையொட்டி அதிமுக சார் பில் அன்னதானம் வழங்கி சுவாமி வழிபாடு செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் பொன் னேரி நகராட்சிக்குட்பட்ட திருவெ ற்றியூர் நெடுஞ்சாலையில் முத்து மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் தீமிதி திருவிழா நடைபெற உள்ளது.
இந்நிலையில் நேற்று அதிமுக பொன்னேரி நகர செயலாளர் செல்வகுமார்,தலை மையிலும் முன்னாள் பேரூராட்சி தலைவர் பா சங்கர்,முன்னிலை யிலும் அதிமுகவினர் அன்னதா னம் வழங்கி சுவாமி வழிபட்டனர்.
இதில் துணை செயலாளர் சத்ய மூர்த்தி,பொருளாளர் சதீஷ், கவுன் சிலர்கள் செந்தில்குமார், கோவிந் தராஜ்,வார்டு செயலாளர் அருள், முன்னாள் மாவட்ட குழு சேர்மன் தமிழ் செல்வி தேவராஜ்,முன்னாள் கவுன்சிலர் மாதவன், சம்பத், மகளி ரணி லட்சுமி உள்ளிட்ட பலர் கல ந்து கொண்டனர்.