எஸ்.செல்வகுமார். செய்தியாளர்
சீர்காழியில் தனியார் கல்லூரியில் மாவட்ட காவல் துறை சார்பில் போதை பொருள் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி (தனியார்) விவேகனந்தா மகளிர் கலைகல்லூரியில் மாவட்ட காவல் துறை சார்பில் போதை பொருள் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் மாவட்ட குற்ற ஆவண காப்பக துணை கண்காணிப்பாளர் மனோகரன்.மற்றும் சீர்காழி காவல் ஆய்வாளர் சிவக்குமார் ஆகியோர் கலந்து கொண்டு மாணவிகளிடையே போதை பொருள் பயன்படுத்துவதால் ஏற்படக்கூடிய தீமைகள் குறித்தும் போதை பொருள் பயன்படுத்தும் நபர்கள் எவ்வாறு சமுகத்தில் பார்க்கப்படுகிறார்கள்.

எவ்வாறு தவறான பாதையில் செல்கிறார்கள் என மாணவிகளிடையே விரிவாக விழிப்புணர்வை வழங்கினர் .மேலும் குடும்ப உறுப்பினர்களோ,அருகில் இருப்பவர்களோ போதை பொருள் பயன்படுத்தினால் ஏற்படக்கூடிய தீமைகளை கூறி நல்வழிப்படுத்தி போதை பொருள் இல்ல தமிழகத்தை உருவாக்க முன்வரவேண்டும் என வலியுருத்தினர்.மேலும் போதை பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து கல்லூரி மாணவிகள் உரையாற்றினார்
.குடும்பத்தலைவர் போதை பொருள் பயன்படுத்தினால் எவ்வாறு அந்த குடும்பம் சீரழிகிறது என நாடகம் மூலம் நடித்துக்காட்டினர்.இதில் காவல்துறையினர், பேராசிரியர்கள் மற்றும் கல்லூரி மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.