திருக்கோவலூர்
மேனாள் முதல் அமைச்சர் டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு….. அங்கவை சங்கவை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில்,
தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை சார்பில் மாணவ, மாணவியர்க்கு பண்டைத் தமிழ்ச் சமூகம் என்ற தலைப்பில் நடைபெற்ற கட்டுரைப்போட்டி மாவட்ட தொல்லியல்துறை அலுவலர் சுரேஷ் தலைமையில் நடைபெற்றது.
போட்டியை தலைமையாசிரியர் கே.வி.ஜெயஸ்ரீ தொடக்கிவைத்தார் நல்நூலகர் மு. அன்பழகன், முன்னிலை வகித்தார்.
கள்ளக்குறிச்சி மாவட்ட வரலாற்று ஆய்வு மைய நடுவத்தின் தலைவர் சிங்கார உதியன் மாணவிகளுக்கு பங்கேற்புச் சான்றிதழ் வழங்கினார் மாணவிகள் ஐம்பதுபேர் பங்கேற்றனர்.
போட்டியை வரலாற்று ஆசிரியர்கள் மா. அல்லி, ஆர்.புவனா, தமிழாசிரியர்கள் குமுதவள்ளி, செ.நளினி. கவிநிலவன். ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.