மதுராந்தகம் செங்கல்பட்டு மாவட்டம்
மதுராந்தகம் அடுத்த தொன்னாடு கிராமத்தில் எழுந்தருளி அருள் பாலிக்கும் அருள்மிகு ஸ்ரீ கங்கை அம்மன் மற்றும் ஸ்ரீ தண்டு மாரியம்மன் ஆலயத்தில் ஆடி மாத பால்குடம் ஊர்வலம் ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம்.
இந்நிலையில் இந்த ஆண்டு ஆடி மாத பால்குடம் ஊர்வலம் கடந்த இரு தினங்களுக்கு முன்பு காப்பு கட்டுகளுடன் துவங்கியது.
இதனைத் தொடர்ந்து மூன்றாம் நாளான இன்று காப்பு கட்டிய பக்தர்கள் கிராம தேவதையான பொன்னியம்மன் ஆலயத்தில் இருந்து பால்குடம் மற்றும் முளைப்பாறையை சுமந்தவாறு கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து பின் கங்கை அம்மன் மற்றும் தண்டு மாரியம்மன் கோவிலை வந்து அடைந்து அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்தனர.
இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு தங்களது நேர்த்திக் கடனை செலுத்தி சாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை விழா குழுவினர் கிராம பொது மக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.
விழாவில் கலந்து கொண்ட அத்தனை பக்தர்களுக்கும் சிறப்பான அன்னதானம் வழங்கப்பட்டது.