எஸ். செல்வகுமார் செய்தியாளர்
சீர்காழி குறுவட்ட அளவிலான சதுரங்க போட்டி
தமிழக அரசு பள்ளிக் கல்வித் துறையால் ஆண்டுதோறும் நடத்தப்படுகின்ற மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி குறுவட்ட அளவிலான சதுரங்க போட்டியானது சீர்காழி எழில் மலர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

போட்டியில் சீர்காழி தாலுகாவில் அமைந்துள்ள அரசு தொடக்கப்பள்ளி அரசு நடுநிலைப்பள்ளி அரசு உயர்நிலைப்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளி மெட்ரிக் பள்ளிகள் .அரசுஉதவி பெறும் பள்ளிகளை சார்ந்த 236 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
இப்போட்டியின் தொடக்க விழாவானது இன்று நடைபெற்றது வரவேற்புரையினை சீர்காழி எழில் மலர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர் N. விஜய் அவர்களும், சீர்காழி சபாநாயக முதலியார் இந்து மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் s. அறிவுடைநம்பி தலைமை ஏற்க, எழில் மலர் மெட்ரிக் பள்ளியின் நிர்வாக இயக்குனர் M.A. சீனிவாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அனைத்து போட்டிகளையும் துவக்கி வைத்தார்கள் இந்நிகழ்வின் முடிவில் சபாநாயகர் முதலியார் இந்து மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி இயக்குனர் s. முரளிதரன் நன்றி கூறினார்
போட்டியின் குறுவட்ட இணை செயலாளர் அரசு உயர்நிலைப்பள்ளி மேலச்சாலை உடற்கல்வி ஆசிரியர். எம். சுந்தரவடிவேல், அனைத்து ஏற்பாடுகளையும் செய்தார். மேலும் இந்த நிகழ்வில் சீர்காழி போராட்டத்தைச் சார்ந்த உடற்கல்வி ஆசிரியர்கள் s. செல்லதுரை s. செல்வராஜ் சூரியமூர்த்தி G. ஹென்றி u. செந்தில்குமார இளையராஜா. P. ராதாகிருஷ்ண ரகுமான். குமரகுரு . காந்திமதி. சுதா.பிரீத்தா கல்விக்கரசி. நேதாஜி ஆகிய உடற்கல்வி ஆசிரியர்கள் கலந்து கொண்டார்கள்