அலங்காநல்லூர் அருகே ஶ்ரீ தீர்தக்கரை மாரியம்மன் திருக்கோவில் 1008 சுமங்கலி பூஜை, திருவிளக்கு பூஜை விழா
அலங்காநல்லூர்
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கீழச்சின்னணம்பட்டி பிரிவில் அமைந்துள்ள ஶ்ரீ தீர்தக்கரை மாரியம்மன் கோவில் ஆடி மாத வெள்ளிக்கிழமையையொட்டி உலக மக்கள் நன்மைக்காக வேண்டி 1008 சுமங்கலி பூஜை, திருவிளக்கு பூஜை விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
இந்த விழாவானது காலையில் கணமதி ஹோமம், லக்ஷ்மி பூஜையுடன் தொடங்கியது. தொடர்ந்து மாலையில் கன்னிகா பூஜை, 1008 சுமங்கலி பூஜை, திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் அப்பகுதியை சேர்ந்த பெண்கள் பலர் திருவிளக்கு பூஜையில் கலந்து கொண்டு தீபமேற்றி வழிபட்டனர்.
முன்னதாக தீர்தக்கரை மாரியம்மன் சிறப்பு வளையல் அலங்காரத்தில் ஊஞ்சல் சேவையில் பக்தர்களுக்கு ஆருள் பாலித்தார். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி அருள்திரு ஶ்ரீநிதி அம்மா தலைமையில் திருக்கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.