பா வடிவேல் அரியலூர் செய்தியாளர்

அரியலூர் மாவட்டத்தில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி மற்றும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்றது

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அரசு மேல்நிலைப் பள்ளியில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி மற்றும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

தமிழக முதல்வரின் உத்தரவு படி தமிழ்நாடு முழுவதும் போதைப் பொருள் ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெறுவதன் தொடர்ச்சியாக அரியலூர் மாவட்டத்தில் உள்ள 175 பள்ளிகள் மற்றும் 32 கல்லூரிகளிலும், அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ் கான் அப்துல்லா அவர்களின் உத்தரவின் படியும், மதுவிலக்கு அமல் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் விஜயராகவன் அவர்களின் வழிகாட்டுதலின் படியும், காவல் துறையினரால் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணிகள், போதைப் பொருள்களுக்கு எதிரான உறுதிமொழி ஏற்பு மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்நடைபெற்றது.

அதன் தொடர்ச்சியாக இந்த பேரணி ஜெயங்கொண்டம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தொடங்கி அண்ணா சிலை, நான்கு ரோடு, முக்கிய வீதிகள் வழியாக பேருந்து நிலையம் சென்றடைந்து நிறைவுபெற்றது.

இதேபோல் பரணம் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ மாணவியர்களின் போதைப் பொருள் இல்லாத தமிழ்நாடு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியை தொடர்ந்து விழிப்புணர்வு பேரணி தலைமை ஆசிரியை உமாபதி தலைமையில் நடைபெற்றது.

இதில் போதை பழக்கத்தால் ஏற்படும் தீய விளைவுகளை நான் முழுமையாக அறிவேன் நான் போதை பழக்கத்திற்கு ஆளாக மாட்டேன் மேலும் எனது குடும்பத்தினரையும் நண்பர் களையும் போதை பழக்கத்திற்கு ஆளாகாமல் தடுக்க அவருக்கு அறிவுரைகள் வழங்குவேன் மீட்டெடுத்து அவர்களை நல்வழிப்படுத்த எனது பங்களிப்பை முழுமையாக தருவேன் போதைப் பொருட்களின் உற்பத்தி நுகர்வு பயன்பாடு ஆகியவற்றிற்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளின் மூலம் போதை பொருட்களை தமிழ்நாட்டில் வேரறுக்க அரசுக்கு துணை நிற்பேன் மாநிலத்தின் வளர்ச்சிக்கு மக்களின் நல்வாழ்விற்கும் நான் அர்ப்பணிப்புடன் பங்காற்றுவேன் என்று உளமாற உறுதி கூறுகிறேன் என்று மாணவர்கள் மத்தியில் அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா அவர்கள் முன்னிலையில் அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

இதில் ஜெயங்கொண்டம் அரசு கலைக் கல்லூரி, அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி, அன்னை தெரேசா செவிலியர் கல்லூரி, மாடர்ன் கலைக் கல்லூரி மாணவ மாணவியர்கள் ஆசிரியர்கள் மற்றும் ஜெயங்கொண்டம் துணை காவல் கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன், காவல் ஆய்வாளர் ஜெகன்நாத், போக்குவரத்து காவல் ஆய்வாளர் சஹிரா பானு, உதவி ஆய்வாளர்கள் தனசெல்வன், செல்வகுமார், இளங்கோவன், சுப்பராயன், நாகராஜ் , தங்கமணி மற்றும் சமூக ஆர்வலர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *