கொளத்தூர் மாவட்ட காவல்துறை சார்பில் போதை ஒழியட்டும் பாதை ஒளிரட்டும் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு.
நடிகர் தாமு பள்ளி மாணவ மாணவிகளுக்கு அறிவுரை….
சென்னை பெருநகர காவல் கொளத்தூர் மாவட்டம் வில்லிவாக்கம் சரகத்தில் போதை ஒழியட்டும் பாதை ஒளிரட்டும் என்ற தலைப்பில் ஐ.சி.எப் அரங்கில் மாபெரும் பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு போதை பொருள் தடுப்பு பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக திரைப்பட நடிகரும் மாணவர் பயிற்சியாளரும் தாமு கலந்து கொண்டார். இதில் ஐ.சி.எப் பொது மேலாளர் பி.கோ. மால்யா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் காவல் மாவட்ட துணை ஆணையாளர் சக்திவேல் வரவேற்புரை நிகழ்த்தினார். முன்னதாக குத்துவிளக்கேற்றி போதை பொருள் தடுப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் காவல் உதவி கமிஷனர்கள் ஆதிமூலம், சிவகுமார், ராகவேந்திராரவி மற்றும் ஐ.சி.எப் அதிகாரிகள் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சியில் வில்லிவாக்கம் அதை சுற்றியுள்ள பள்ளிகளில் இருந்த மாணவ மாணவிகள் ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்.
போதை பொருட்களை ஒழிப்பது குறித்தும் அதில் இருந்து தங்களை பாதுகாப்பது குறித்தும் பள்ளி மாணவ மாணவிகள் பெற்றோர்களிடத்தில் எப்படி நடந்து கொள்வது என்பது பற்றியும் பள்ளி ஆசிரியை ஆசிரியர்களுக்கு மரியாதை கொடுத்து அவர்கள் எடுக்கும் பாடங்களை செவியில் கேட்டு மனதில் பதிய வைத்து தேர்வு வரும் நேரத்தில் சிறப்பாக தேர்வு எழுதி தேர்வில் அனைவரும் நல்ல மதிப்பெண்கள் எடுத்து வெற்றி பெற்று தானும் ஒரு சாம்பியனாக திகழவும் மேலும் செல்போனில் அதிக நேரம் செலவிட வேண்டாம் என்றும் அதில் நல்ல விஷயங்கள் உள்ளது பற்றியும் அதனை நமது அறிவுக்கூர்மைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் எனவும் அப்துல் கலாமின் கட்டளைகளை மனதில் ஏற்று கனவுகளை நினைவாக்க செயலாற்ற வேண்டும் எனவும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தாமு மாணவ மாணவிகளுக்கு அறிவுரை வழங்கினார். இதில் கொளத்தூர் காவல் மாவட்ட ஆய்வாளர்கள் உதவி ஆய்வாளர்கள் போலீஸார்கள் மகளிர் போலீஸார்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
மேலும் நடிகர் தாமு உரையாற்றும் போது தாயின் வயிற்றில் நீங்கள் கருவாக இருந்தது முதல் தற்போது வரை உங்கள் தாயார் உங்களை எப்படி பார்த்து பார்த்து வளர்த்தார் எனவும் தந்தையர் செலவினங்களுக்காக எந்த அளவுக்கு கஷ்டப்பட்டு உழைக்கின்றார் எனவும் பள்ளி மாணவ மாணவியர்களுக்கு பெற்றோர்களின் நிலைமையை எடுத்துக் கூறியதும் சில பள்ளி மாணவிகளும் மாணவர்களும் மற்றும் பெண் காவலர்களும் கதறி அழுதார்கள் .இறுதியில் மாதவரம் காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் ஜெயபிரகாஷ் நன்றி கூற நாட்டுப்பண் இசைக்க நிகழ்ச்சி முடிவு பெற்றது.