ஸ்ரீ திருவீதி அம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு 108 பால் குட ஊர்வலம் புழலில் நடைபெற்றது.
சென்னை கொளத்தூர் செய்தியாளர்
அகமது அலி
புழல் திருவீதியம்மன் திருக்கோவிலின் மூன்றாம் ஆண்டு ஆடி திருவிழாவை முன்னிட்டு 108 பால்குட ஊர்வலம் புழலில் நடைபெற்றது.
முன்னதாக ஆலய நிர்வாகியும் சமூக சேவகருமான பாலாஜி தலைமையில் புழல் காந்தி தெருவில் உள்ள ஏகவள்ளியம்மன் ஆலயத்தில் இருந்து அம்மனுக்கு பல்வேறு சிறப்பு பூஜைகள் செய்து ஆண்கள் பெண்கள் என நூற்றுக்கு மேற்பட்ட பக்தர்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேற அம்மனுக்கு பால்குடம் சுமந்தனர். இந்த ஊர்வலம் புழல் சுற்றியுள்ள முக்கிய வீதிகளில் வலம் சென்று மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது.
அதன்பின் அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்து பல்வேறு வண்ண மலர்களாலும் வாசனை திரவியங்களாலும் அம்மன் அலங்கரிக்கப்பட்டு பூஜைகள் செய்து தீப ஆராதனைகள் காண்பிக்கப்பட்டது. இதில் நூற்றுக்கு மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.