கும்பகோணம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன்
கும்பகோணத்தில் கோட்டாட்சியர் அலுவலத்தில் பராமரிப்பின்றி இருக்கும் கழிவறையை சீரமைக்கக்கோரி சி.பி.எம்.எல். மக்கள் விடுதலை கட்சியின் சார்பில் கோரிக்கை

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் கோட்டாட்சியர் அலுவலகம் தொடர்பாக தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இந்த அலுவலகங்களுக்கு குறிப்பாக பெண்கள் அதிக அளவில் வருவதுண்டு இந்த நிலையில் அலுவலகத்திற்கு வரும் பொது மக்களுக்கு நல்ல குடிநீர் கிடைப்பதில்லை மேலும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கட்டப்பட்டிருந்த கழிவறை நீண்ட நாட்களாக பராமரிப்பு இன்றி சுகாதார சீர்கேட்டை உண்டு பண்ணும் அளவிற்கு கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு பின்புறம் அமைந்துள்ளது

தினமும் அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் சிறுநீர் கழிக்கவும் அவதிப்பட்டு வருகின்றனர் தற்போது பொறுப்பு அது அதிகாரியாக செயல்பட்டு வரும் உயர்திரு வட்டாட்சியர் அவர்களும் உயர்திரு கோட்டாட்சியர் அவர்களும் இந்த கழிவறை தொடர்பான பிரச்சனையை கவனத்தில் எடுத்துக் கொண்டு தாங்கள் இருக்கக்கூடிய அந்த இடத்திலேயே பொதுமக்களுக்கான பிரச்சனை தீர்க்கப்படாமல் உள்ளது
என்பதை கவனத்தில் கொண்டு உடனடியாக கழிவறையை சீர் செய்ய உரிய அதிகாரிகளுக்கு பரிசீலனை செய்யுமாறு பொதுமக்கள் கோரிக்கையாக இதை செய்து கொடுக்க வேண்டும் என கும்பகோணம் பொதுமக்கள் மற்றும் கும்பகோணம் சி.பி.எம்.எல். (மக்கள் விடுதலை) கம்யூனிஸ்ட் கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.