தமிழ்நாடு நாடார் உறவின்முறைகள் கூட்டமைப்பின் சார்பில் மாலை முரசு அதிபரும் தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியின் முன்னாள் இயக்குனருமான பா ராமச்சந்திர ஆதித்தனார் அவர்களுடைய 89 வது பிறந்தநாளை முன்னிட்டு அகரக்கட்டில் உள்ள தமிழ்நாடு நாடார் உறவின் முறைகள் கூட்டமைப்பின் தலைமை அலுவலகத்தில் தலைவர் அகரக்கட்டு லூர்து நாடார் தலைமையில் பா ராமச்சந்திர ஆதித்தனார் அவர்களின் திரு உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி புகழஞ்சலியை செலுத்தினார்கள்
அப்போது பேசிய அகரக்கட்டு லூர்து நாடார் பா ராமச்சந்திர ஆதித்தனார் அவர்களோடு வங்கி மீட்பு குழுவோடும் தென்காசி மாவட்டத்தில் பெருந்தலைவர் காமராஜரின் 3 திரு உருவச் சிலைகளை திறந்து வைக்கும் போதும் பா ராமச்சந்திர ஆதித்தனார் அவர்களோடு நான் சென்ற அனுபவத்தை ஒருபோதும் மறக்க முடியாது
தென்காசி மாவட்டத்தில் தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் அதிகமான நாடார் சமுதாய மக்கள் வேலை செய்கிறார்கள் என்றால் அதற்கு காரணமாக இருந்தவர் ராமச்சந்திர ஆதித்தனார் அவர்கள் தென்காசி மாவட்டத்தில் உள்ள அருணாசலப்பட்டி ராயகிரி பாவூர்சத்திரம் இந்த மூன்று ஊர்களிலும் உள்ள பெருந்தலைவர் காமராஜரின் திருஉருவச் சிலையை திறந்து வைத்த பெருமைக்குரியவர் பா ராமச்சந்திர ஆதித்தனார் அவர்கள் தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியை நாடார் சமுதாயத்திற்கு முழுமையாக மீட்டு விட வேண்டும் என்று தன்னை முழுமையாக சமுதாயத்திற்கு அர்ப்பணித்து கிராமம் கிராமமாக சென்று பங்குகளை சேகரித்து தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தியவர்
ராமச்சந்திரா ஆதித்தனார் அவர்கள் அதனால் ராமச்சந்திர ஆதித்தனாருடைய 89 ஆவது பிறந்தநாளில் தமிழ்நாடு நாடார் உறவின் முறைகள் கூட்டமைப்பு புகழஞ்சலி செலுத்துவதில் பெருமை கொள்கிறது என்று பேசினார்கள் இந்த நிகழ்ச்சியில் மாநில பொருளாளர் சுப்ரமணியன் தென்காசி மாவட்ட தலைவர் ராஜ் நயினார் மாவட்ட துணைத் தலைவர் திருமலைக்குமார் மற்றும் வர்க்கீஸ் கண்ணன் செபஸ்தியான் அந்தோணி ராஜ் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்