கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள அக்காமலை எஸ்டேட் இரண்டாவது டிவிஷன் பகுதியில் வனத்தையொட்டி அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ வனப்பேச்சியம்மன் கோவில் விழா ஆண்டுதோறும் இரண்டாவது டிவிசன் தொழிலாளர்களால் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது
அதேபோல இந்த ஆண்டு ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு காலையில் அம்மனுக்கு பால், பன்னீர், இளநீர் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு அழகிய அழங்காரத்தில் அம்மனுக்கு அழங்கார பூஜை நடைபெற்றது
அதைத்தொடர்ந்து அனைவருக்கும் பிரசாதங்கள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது இவ்விழாவை மேற்ப்பார்வையாளர் கணேசன் தலைமையில் தொழிலாளர்கள் ஏற்ப்பாடு செய்திருந்த நிலையில் எஸ்டேட் மேலாளர்,உதவி மேலாளர் மற்றும் இரண்டாவது பிரிவு கள அலுவலர் செந்தில்குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்தனர்