நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு விவேகானந்தா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பாக கடந்த 8 ஆம் தேதி துவங்கி 11ஆம் தேதி முடிய 4 நாட்கள் மாநில அளவிலான மகளிர்களுக்கான டி 20 கிரிக்கெட் போட்டிகள் 4 நாட்கள் நடைபெற்று வந்தது.

விவேகானந்தா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி உடற்பயிற்சி கல்வித்துறை சார்பாக நடைபெற்ற டி. 20 மகளிர்க்கன போட்டியில்

மதுரை லேடி டோக் காலேஜ், சென்னை குருநானக் அகாடமி, சென்னை ஜேப்பியார் ஜாக்கூராஸ், கேரளா பிளம்பிங்கோ அகாடமி ,
சேலம் நரசுஸ் காலேஜ், சென்னை நத்திங் பட் கிரிக்கெட், வேலூர் ராணிப்பேட்டை பியர்லஸ் பைட்டர், திருச்சி கொங்குநாடு இன்ஜினியரிங் காலேஜ், நாமக்கல் கியூபா ஆப் கொல்லி ஹில்ஸ்அகாடமி, திருப்பூர் ஜாய் ஸ்ரீராம் இன்ஜினியரிங் காலேஜ், சேலம் 8 ஆர்ட்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப், கரூர் அரசு காலேஜ், கன்னியாகுமரி கன்னியாகுமரி ஸ்போர்ட்ஸ் கிளப், திருச்செங்கோடு விவேகானந்தா மகளிர்
காலேஜ் ஆப் இன்ஜினியரிங், சென்னை ஸ்மில்லிங் பியர்ஸ், ஓசூர் பியர்லஸ் பிட்டர், நாமக்கல் செல்வம் கல்லூரி, ராமநாதபுரம் நம்பர் டு கிரிக்கெட் பவுண்டேஷன், சங்ககிரி ரவீந்திரநாத் தாகூர் காலேஜ் எஜுகேஷன் ஃபார் வின், திருப்பூர் ஸ்ரீ ராமகிருஷ்ணா டிரஸ்ட், மதுரை விங்ஸ் ஆப் பயர் அகடாமி, திருச்செங்கோடு விவேகானந்தா காலேஜ் ஆப் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் ஃபார்வுமன், திருச்செங்கோடு விவேகானந்தா ஸ்போர்ட்ஸ் அகாடமி, திண்டுக்கல் பிரசித்தி பிரசித்தி வித்யாலயா ஸ்கூல் உள்ளிட்ட 24 கல்வி நிறுவனங்கள் சார்ந்த மகளிர் அணிகள் கலந்து கொண்டு விளையாடினர்

நாக்கவுட் முறையில் 4 நாட்கள் நடைபெற்ற இந்த மாநில அளவிலான மகளிருக்கான டி 20 கிரிக்கெட் போட்டியில் குவாட்டர் பைனல், செமி பைனல் என்று விளையாடி இறுதியாக பைனல் விளையாட்டில் சென்னை குருநானக் அகடாமி அணி முதலிடத்திலும் இரண்டாவதாக சென்னை ஜேப்பியார் ஜாக்கூராஸ் அணியும், மூன்றாவதாக வேலூர் ராணிப்பேட்டை பியர்லஸ் பைட்டர் அணியும், நான்காவதாக திருச்செங்கோடு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரிஅணியும் வென்றன

வெற்றி வெற்றி பெற்ற அணிகளுக்கு சுழல் கோப்பைகளையும், மெடல்களையும், சான்றிதழ்களையும் ரொக்கப் பரிசுகளையும் விவேகானந்தா மகளிர் கல்வி நிறுவனங்களின் தலைவர் மற்றும் செயலாளர் டாக்டர் மு. கருணாநிதி வழங்கி பாராட்டி பேசினார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *