தி சென்னை மொபைல்ஸ் நிறுவனம் துவங்கி 20 ஆண்டுகள் நிறைவடைவதை சாம்சங் நிறுவனத்தின் GALAXY Z FOLD5,Z FLIP5 என்ற புதிய மாடல் ஸ்மார்ட் போன்களை அறிமுகப்படுத்தி 100 வாடிக்கையாளர்களுக்கு வழங்கியுள்ளது..

தென்னிந்தியாவின் பிரபலமான தி சென்னை மொபைல்ஸ் நிறுவனம் கடந்த 2003 ஆம் ஆண்டு துவக்கப்பட்டு நூற்றுக்கு மேற்பட்ட கிளைகளுடன் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் தி சென்னை மொபைல்ஸ் நிறுவனம் தொடங்கி 20 ஆண்டுகள் நிறைவடைவதை ஒட்டிகோவை நவ இந்தியா பகுதியிலுள்ள தனியார் விடுதியில் 20 ஆம் ஆண்டு நிறைவு விழா நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் தி சென்னை மொபைல்ஸ் நிறுவனத்தின் எலைட் வாடிக்கையாளர்கள் நூறு பேருக்கு புதிய மாடல் சாம்சங் மைபைல்களை வழங்கியுள்ளது. குறிப்பாக சாம்சங் நிறுவனத்தின் புதிய மாடல்களான GALAXY Z FOLD5,Z FLIP5 என்ற புதிய மாடல் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வைத்த நிறுவனர் சாம்சு அலி, முதற்கட்டமாக 100 எலைட் வாடிக்கையாளர்களுக்கு ஸ்மார்ட் ஃபோன்களை வழங்கினார்..

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சம்சு அலி,கடந்த 20 வருடங்களாக தி சென்னை மொபைல்ஸ் நிறுவனம் வெற்றி பெற்றதற்கு வாடிக்கையாளர்கள் தான் காரணம் எனவும், தற்போது இருபது ஆம் ஆண்டு நிறைவு விழாவை ஒட்டி தங்களது 100 டிலைட் வாடிக்கையாளர்களுக்கு புதிய மாடல் சாம்சங் ஸ்மார்ட் போன்கள் வழங்கப்பட்டுள்ளது.

இந்த போன்களுக்கு தேவையான பாகங்கள் அனைத்தும் தி சென்னை மொபைல்ஸ் கடைகளில் கிடைக்கும் எனவும் புதிய மாடல் சாம்சங் போன்கள் அதிக எடை இல்லாமல் ஸ்லிம்மாக லேப்டாப் மாதிரி இருப்பதால் வாடிக்கையாளர்கள் ஆர்வத்துடன் வாங்குவதாக தெரிவித்தார்.

ஆடல் பாடல் மேஜிக் ஷோ என பொழுதுபோக்கு அம்சங்களுடன் நடந்த இந்த நிகழ்ச்சியை வாடிக்கையாளர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு கண்டு களித்தினர்

பேட்டி- சம்சு அலி- நிறுவனர்- தி சென்னை மொபைல்ஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *