ஜே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர்
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஆலோசனைக் கூட்டம் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது
கூட்டத்திற்கு தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் . டி.ஆர்.பி.ராஜா தலைமை வகித்தார் திருவாரூர் மாவட்ட தி.சாருஸ்ரீ காவல் கண்கானிப்பாளர் டி.பி.சுரேஷ்குமார் நாகை நாடாளுமன்ற உறுப்பினர் எம்.செல்வராஜ் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி.கே.கலைவாணன் மாவட்ட ஊராட்சித்தலைவர் தலையாமங்கலம் கோ.பாலசுப்ரமணியன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்
தலைமையேற்று பேசிய அமைச்சர் டிஆர்பி ராஜா செய்தியாளர் சந்திப்பின்போது கூறியதாவது
தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிற்கிணங்க அனைத்துறை அலவலர்களுடான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது திருவாரூர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் சீரிய திட்டங்களான வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் கலைஞர் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் இ-வாடகை குறித்தும் ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் உதவிக்குழுக்களுக்கு வங்கிக்கடன் இணைப்பு, தீனதயாள் உபாத்யா கிராமின் கௌசல்யா திட்டம் குடிநீர் விநியோகம் ஊரகம் உள்ளிட்ட திட்டங்கள் குறித்தும் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறையின் சார்பில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டம் நமக்கு நாமே திட்டம் ஜல் ஜீவன் மிஷன் திட்டம் குறித்தும வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைதுறையின் கீழ் இயங்கும் தமிழ்நாடு அரசின் இ-சேவை மையம், பள்ளி கல்வித்துறையின் எண்ணும், எழுத்தும் இயக்கம் பள்ளி உட்கட்டமைப்பு அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் சிறப்பு திட்ட செயலாக்களான நான் முதல்வன் திட்டம் முதலமைச்சரின் சிறப்பு திட்டாக்கப் பணிகள் செயல்பாடுகள் குறித்தும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில் முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டப்பணிகள் அங்கான்வாடிகள் புதுமை பெண் திட்டம் குறித்தும் மருத்துவத்துறையின் மக்களை தேடி மருத்துவம் குறித்தும், முதல்வரின் முகவரி திட்டம் உள்ளிட்ட திட்டங்களின் செயல்பாடுகள் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்யப்பட்டுள்ளது
தென் மாவட்டங்களில் அதிகமாக தொழில் பேட்டைகள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது வெளிநாட்டு தொழில் நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தொழில்களை தொடங்கயுள்ளது இதன் மூலம் படித்த இளைஞர்களுக்கு அதிக வேலை வாய்ப்புகள் கிடைக்கும் குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் விவசாயம் சார்ந்த தொழிற்பேட்டைகள் தமிழ்நாடு முதலமைச்சர் ஆலோசனையின் படி விரைவில் தொடங்கப்படும் அமைச்சர் தெரிவித்தார்
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கு.சண்முகநாதன் திட்ட இயக்குநர் சந்திரா வருவாய் கோட்டாட்சியர்கள் திருவாரூர் சங்கீதா மன்னார்குடி செல்வி.கீர்த்தணாமணி திருவாரூர் நகரமன்ற தலைவர் புவனபிரியா செந்தில் திருவாரூர் நகரமன்ற உறுப்பினர் வாரை பிரகாஷ் உள்ளிட்ட அனைத்துதுறை உயர் அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்