கே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர்
முன்னாள் அமைச்சர் ஆர் காமராஜ் தலைமையில் அண்ணா திமுகவில் இணைந்த. மாற்றுக் கட்சியினர் தஞ்சாவூர் வடக்கு மாவட்டம் பாபநாசத்தில் அண்ணா திமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது

ஆலோசனைக் கூட்டத்தில் அண்ணா திமுக கழக அமைப்பு செயலாளரும் முன்னாள் அமைச்சர் ஆர் காமராஜ் எம் எல் ஏ தலைமையில் நடைபெற்றது
முன்னாள் முதலமைச்சரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான அதிமுக கழக பொதுச் செயலாளர் எடப்பாடி யார் தலைமையில் பொன்விழா எழுச்சி மாநாடு எதிர் வரும் 20ஆம் தேதி மதுரையில் நடைபெற உள்ளது,
அதனை முன்னிட்டு தஞ்சாவூர் வடக்கு மாவட்டம் பாபநாசத்தில் இளைஞர் இளம்பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் துரை.சண்முக பிரபு ஏற்பாட்டில் பிரச்சார வாகன பயணம் தொடங்கியது
பிரச்சார வாகனத்தை கழக அமைப்பு செயலாளரும் திருவாரூர் மாவட்ட செயலாளருமான முன்னாள் அமைச்சர் ஆர் காமராஜ் எம் எல் ஏ கொடியசைத்து தொடங்கி வைத்தார் அதனைத் தொடர்ந்து மதுரை மாநாடு குறித்து அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
ஆலோசனைக் கூட்டத்தில் பிரச்சார வாகனத்தை தொடங்கி வைத்து பேசிய முன்னாள் அமைச்சர் ஆர் காமராஜ் மதுரை மாநாட்டிற்கு 20 லட்சத்திற்கும் மேல் தொண்டர்கள் வருவார்கள் இது மிகப்பெரிய வெற்றி எழுச்சி மாநாடாக அமையும் எனவும் தெரிவித்தார்
எழுச்சி மாநாட்டில் தஞ்சாவூர் வடக்கு மாவட்டம் சார்பில் பங்கேற்கும் வேண்டுமென கேட்டுக்கொண்டார் அதனைத் தொடர்ந்து திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் மதியழகன் உட்பட பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் மாற்றுக் கட்சியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் முன்னாள் அமைச்சர் ஆர் காமராஜ் முன்னிலையில் அதிமுகவில் அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர் ஆலோசனைக் கூட்டத்தில் தஞ்சாவூர் வடக்கு மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் துரை. சண்முகபிரபு, மாவட்ட அவைத் தலைவர் ராம்குமார் ஒன்றிய செயலாளர்கள் தியாகை. பழனிச்சாமி கோபிநாதன், ஏ.வி சூரியநாராயணன், ராமச்சந்திரன் நகர செயலாளர்கள் சின்னையன் கோவிந்தசாமி சின்னதுரை காமராஜ் கட்சியின் நிர்வாகிகள் பாஸ்கர், புள்ள பூதங்குடி கண்ணன், முருகதாஸ் ஜெனட் ஆனந்தி, திலகவதி கணேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்