திருவள்ளூர்
திருவள்ளூர் மாவட்டம் பொன் னேரி தாலுக்கா மீஞ்சூர் பேரூரா ட்சிக்கு உட்பட்ட ஹேமச்சந்திரா நக ரில் திமுகவைச் சேர்ந்த முன்னாள் பேரூர் கழக செயலாளரும் முன் னாள் பேரூராட்சி துணைத் தலை வருமான பொ. பாண்டுரங்கன் அவர்களின் நினைவு கல்வெட்டு திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற் றது.
இந்நிகழ்ச்சிக்கு திருவள்ளூர் கிழ க்கு மாவட்ட செயலாளரும் கும்மி டிப்பூண்டி தொகுதி சட்டமன்ற உறு ப்பினர் டி ஜே கோவிந்தராஜன் தலைமை தாங்கினார். நினைவு கல்வெட்டை திமுக கழக அமைப்பு செயலாளரும் முன்னாள் நாடாளு மன்ற உறுப்பினர் ஆர் எஸ் பாரதி திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் மீஞ்சூர் நகர செயலாளர் தமிழ் உதயன், மீஞ்சூர் பேரூராட்சி துணைத் தலைவர் அலெக்சாண்டர் மற்றும் மீஞ்சூர் கழக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மீஞ்சூர் நகர பேரூர் கழக செயலா ளர் தமிழ் உதயன் மற்றும் மீஞ்சூர் பேருர் கழகம் சார்பில் செய்யப்பட் டிருந்தது.