நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் உதகை- மைசூரி தேசிய நெடுஞ்சாலை யில் சாலை விரிவாக்க பணிக்காக பாலம் சீரமைக்கும் பணி நடந்து வருகிறது.
வேலை நடந்து கொண்டிருக்கும் நேரம் எதிர்பாராத விதமாக மண் சரிந்து பாலம் இடிந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தேசிய நெடுஞ்சாலை துறையினர்,வருவாய் துறை,காவல் துறை அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்திற்கு வருகை தந்து போக்குவரத்தினை சீரமைத்து இலகுரக வாகனங்கள் செல்லும் வகையில் துரித நடவடிக்கை எடுத்து போக்குவரத்தினை சீர் செய்தனர்.
இதனால் சில மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா வாகனங்கள் சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் பாதிக்கப்பட்டனர்.