தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பேரூராட்சிக்குட்பட்ட 18 வார்டு பகுதிகளில் இருந்து திமுக , பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளில் இருந்து சுமார் 200 பேர் அக்கட்சியில் இருந்து விலகி பேரூராட்சி கவுன்சிலர் விமலன் தலைமையில்
அதிமுக முன்னாள் உயர்கல்வி மற்றும் வேளாண்மைத் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் எம்.எல்.ஏ முன்னிலையில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
கட்சியில் இணைந்த புதிய உறுப்பிணர்கள் அனைவருக்கும் கட்சி துண்டு, வேட்டி அணிவித்து அனைவரையும் வரவேற்று பேசியதாவது.
பாலக்கோடு தொகுயில் விவசாயிகளின் வாழ்வாதர தண்ணீர் பிரச்சனையை நிறைவேற்றும் விதமாக என்னேகொல்புதுர் திட்டம், அலியாளம் அணைக்கட்டு திட்டம், தூள் செட்டி ஏரி திட்டம், புலிக்கரை கால்வாய் திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களால் தொடங்கபட்ட திட்டங்களின் திட்டப் பணிகள் விரைந்து நடைப்பெற்று வருகிறது, விரைவில் திட்டம் பயன்பாட்டிற்க்கு கொண்டு வரப்படும் என்றும்,
விடியா திமுக ஆட்சியில் முடக்கப்பட்ட அனைத்து திட்டங்களும் அதிமுக ஆட்சி அமைந்த உடன் மீண்டும் தொடங்கப்படும் என தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் நகர செயலாளர் ராஜா, ஒன்றிய செயலாளர்கள் வழக்கறிஞர் செந்தில், கோபால், மாவட்ட கவுன்சிலர் சரவணன், கூட்டுறவு சங்க தலைவர்கள் புதுர் சுப்ரமணி, வீரமணி,
பி.செட்டிஅள்ளி ஊராட்சி மன்ற தலைவர் கனபதி மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.