கோவை

வாசவி வித்யாலயா பள்ளி மாணவர்களின் ஒயிலாட்டம்-கவனத்தை ஈர்த்த நாட்டுப்புற கலை..

கோவையில் கிராமிய கலை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 76வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு வாசவி வித்யாலயா பள்ளி மாணவ மாணவிகள் ஒயிலாட்டம் ஆடி அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளனர்.

தமிழகத்தில் நாட்டுப்புற கலைகளின் மிக முக்கியமான கலையாக ஒயிலாட்டம் உள்ளது. இதனை 76 வது சுதந்திர தினத்தில் இளம் தலைமுறைக்கு கொண்டு செல்லும் விதமாக கோவை தெலுங்குபாளையம் பகுதியில் உள்ள வாசவி வித்யாலயா பள்ளியில் மாணவர்களின் ஒயிலாட்ட அரங்கேற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது…

இதில் 76 பள்ளி மாணவ மாணவிகள் மூவர்ண கொடியின் வண்ண உடைகள் அனிந்து சுதந்திரம் எனும் பாடலுக்கு ஒயிலாட்டம் ஆடி அசத்தினர்.தொடர்ந்து 9நிமிடம் கிராமிய கலை குறித்து ஒயிலாட்டம் ஆடி இளம் தலைமுறைக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய இந்த நிகழ்ச்சி இன்டர்நேஷனல் ப்ரைட் ஆப் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது.

இதில் பள்ளியின் துணை செயலாளர் ஐயப்பன்,முதல்வர் பத்மலதா, நடன ஆசிரியர் சாய் புவனேஷ், ஆசிரியர்கள், என பலர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *