எஸ். செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி

சீர்காழி அருகே ஓலையாம்புதூர் கிராமத்தில் குளத்தில் மண் எடுக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் பணியை தடுத்து நிறுத்தி போராட்டம். குளத்திற்கு தண்ணீர் வரும் வாய்க்கால் ஆக்கிரமைப்பை அகற்ற கோரிக்கை.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த ஓலையாம்புத்தூர் கிராமத்தில் ஐயனார்கோவில் குளம் அமைந்துள்ளது.

பழமை வாய்ந்த இக்குளத்தில் கடந்த சில ஆண்டுகளாக ஏற்கனவே பல முறை மண் எடுத்துள்ளனர். இதனால் குளம் அளவுக்கு அதிகமாக ஆழமான நிலையில் உள்ளது. குளம் ஆழமான நிலையில் குளத்திற்கு தண்ணீர் வரும் வாய்க்கால் ஆக்கிரமைப்பை அகற்ற கோரியும் வடிகால் வாய்க்காலை சீரமைக்க கோரியும் பலமுறை கிராம மக்கள் மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்க படவில்லை என கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்நிலையில் மீண்டும் அய்யனார் கோவில் குளத்தில் மண் எடுக்க தனியாருக்கு அனுமதி வழங்கபட்டதால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் மண் எடுக்கும் பணியை தடுத்து நிறுத்தி வாகனங்களை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த வைத்தீஸ்வரன் கோவில் போலீசார் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில் பொதுமக்கள் தற்காலிகமாக போராட்டத்தை கைவிட்டு களைந்து சென்றனர்.இனி மண் எடுக்கக்கூடாது எனவும் வாய்க்கால் ஆக்கிரமைப்பை உடனே அகற்ற வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *