தினேஷ்குமார் செய்தியாளர் திருப்பத்தூர்

திருப்பத்தூரில் தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் மாவட்ட பேரவை கூட்டம்..

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சி ரயில்வே ஸ்டேஷன் ரோடு பகுதியில் உள்ள லயன்ஸ் கிளப் அரங்கில் இன்று தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் மாவட்ட பேரவை கூட்டம் மாவட்ட தலைவர் ராசு தலைமையில் நடைபெற்றது.

இதில் சத்துணவு, அங்கன்வாடி, ஊராட்சி செயலாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியம் 7850 ரூபாய் வழங்க வேண்டும், பழைய ஓய்வூதியம் திட்டத்தை மீண்டும் நடைமுறைபடுத்த வேண்டும், ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு வருமான வரியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும், மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் மருத்துவ படி வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இதில் மாவட்ட செயலாளர் ஞானசேகரன், மாவட்ட பொருளாளர் ஆனந்தன், திருப்பத்தூர் வட்ட செயலாளர் ஞானசேகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்..

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *