அலங்காநல்லூர்.செப்.01-

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், கேட்டுகடை தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக சார்பில் 2024- பாராளுமன்ற தேர்தல் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதற்கு ஒன்றிய கழக செயலாளர் கல்லணை ரவிச்சந்திரன், தலைமை தாங்கினார்.

நகர செயலாளர் அழகுராஜ், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் கருப்பையா, மாணிக்கம், மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் அரியூர் ராதாகிருஷ்ணன்,அவைத் தலைவர் பாலகிருஷ்ணன்,பாசறை மாவட்ட இணை செயலாளர் உமேஷ்சந்தர், மகளிரணி மாவட்ட செயலாளர் லட்சுமி, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு பேசியது அதிமுகவை தோற்றுவித்த நமது புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்களும் அதனை தொடர்ந்து இயக்கத்தை பல்வேறு சோதனைகளுக்கு மத்தியில் கட்டி காத்து வந்த புரட்சித் தலைவி அவர்களும் பல்வேறு தேர்தல்களில் சோதனை கண்டு தொடர்ந்து சாதனை புரிந்தார்கள் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் சட்டமன்றத்தில் கூறியது போல் எனக்குப் பின்னாலும் இந்த இயக்கம் 100 ஆண்டு தொடர்ந்து நடைபெறும் என்பதைப் போல் நமது கழகப் பொதுச் செயலாளர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் புரட்சித் தமிழர் அண்ணன் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் கடந்த நான்காண்டு ஆட்சியில் சிறப்பான நிர்வாகத் திறனால் மக்களுக்கு பல்வேறு திட்டங்களை ஏற்படுத்திக் கொடுத்தார் ஆனால் எதிர்க்கட்சிகளோ அவர் செய்யும் ஆட்சித் திறனை பார்த்து கேலியும் கிண்டலும் செய்தனர்

தொடர்ந்து பல்வேறு எண்ணற்ற திட்டங்களை செய்து காட்டிய சரித்திர நாயகன் விவசாயிகளின் விடி வெள்ளி நமது கழகப் பொதுச் செயலாளர் என்று தெரிவித்தார் வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கான முன்கூட்டிய பணிகளை இப்போதே தொடங்கி விட்டோம்

புதன்கிழமை மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வருகை தந்த எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் நம்மிடத்தில் கூறியது இன்று பௌர்ணமி நாளில் பூத் கமிட்டி அமைப்பது குறித்து ஆலோசனை வழங்கினார் அதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் மாலை சோழவந்தானிலும் கடுமையான மழை பெய்தது அதனையும் பொருட்படுத்தாமல் கூட்டத்தை சிறப்பாக நடத்தி முடித்தோம்..

இன்று காலை நமது அலங்காநல்லூரில் கூட்டம் நடை பெற்று கொண்டுள்ளது கடந்த பாராளுமன்றத் தேர்தலில் 39 தொகுதியிலும் குறைவான வாக்கு வித்தியாசத்தில் தோல்வியை தழுவினாலும் தேனி பாராளுமன்றம் நமக்கு மகத்தான வெற்றியை தந்தது அதற்கு எடுத்துக்காட்டு நமது சோழவந்தான் தொகுதி நிர்வாகிகளின் வேலைப்பாடு சிறப்பாக இருந்தது அதேபோன்று வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் அதிமுக அமோக வெற்றி பெறும் என்று கூறினார் தொடர்ந்து நிர்வாகிகளுக்கு பூத்து கமிட்டி புத்தகங்களை வழங்கினார்.

இதில் ஒன்றிய துணை செயலாளர் சம்பத், எம்.ஜி.ஆர் மன்ற மாவட்ட இணை செயலாளர் ஜெயச்சந்திரமணியன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மாணிக்கம், ஒன்றிய கவுன்சிலர் ரேவதி, பேரூராட்சி கவுன்சிலர் நாட்டாமை சுந்தர், நகர இணைச் செயலாளர் புளியம்மாள், துணை செயலாளர் லதா, ஊராட்சி மன்ற தலைவர்கள் மயில்வீரன், திருநாவுக்கரசு, ஸ்ரீசுதாமுருகன், செல்வராணிசிதம்பரம், நிர்வாகிகள் எம்.எஸ்.சுந்தரம், வழக்கறிஞர் ராஜ்குமார், வார்டு செயலாளர்கள் செயலாளர் பாஸ்கரன், கேட்டுகடை ஆறுமுகம், மற்றும் நிர்வாகிகள் செவக்காடுகருப்பு, புதுப்பட்டி பாண்டுரங்கன், தாமரை, பழனிகுமார், தகவல் தொழில்நுட்ப அணி தண்டலை ஆனந்த், செந்தில், மற்றும் பெரியஊர்சேரிசெந்தில், விவசாய அணி கே.கே.காமாட்சி, கிளை செயலாளர்கள் பெரிய இலந்தைகுளம் ஜெகதீஷ், தனுஷ்கோடி, குடடிமேக்கிபட்டி சோனை, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *