கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடர்பாக, வலங்கைமான் அடுத்த பாடகச்சேரி கிராமத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சண்முகநாதன் நேரில் ஆய்வு செய்தார்.
திருவாரூர் மாவட்டத்தில் 771நியாயவிலை கடைகளில் 3லட்சத்து91ஆயிரத்து 748 குடும்பஅட்டைதாரர்கள் இருந்து
வரும் நிலையில் இவர்களுக்கான கலைஞர் உரிமைத் தொகை திட்டத்திற்கானவிண்ணப்பங்கள் அனைத்தும் வரப்பெற்று
விண்ணப்பப் பதிவு முகாம்கள் 2கட்டங்களாக
நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டது.
அதன்படிமுதல் கட்டமாக மன்னார்குடி,திருவாரூர்,நீடாமங்கலம் மற்றும் வலங்கைமான் ஆகியவருவாய் வட்டங்களில் கடந்த மாதம் 24-ந்தேதிமுதல் கடந்த 4-ம்தேதிவரையிலான விண்ணப்பபதிவின்நிறைவாக 1லட்சத்து55ஆயிரத்து 818 விண்ணப்பங்கள்பெறப்பட்டது.
இந்நிலையில் 2-ம் கட்டமாக நன்னிலம், குடவாசல், திருத்துறைப்பூண்டி,முத்துப்பேட்டை, கூத்தாநல்லூர் ஆகிய
வருவாய் வட்டங்களில் கடந்த 11-ந்தேதி வரையில் நடைபெற்றது. இந்த முகாமில் 1லட்சத்து51ஆயிரத்து 23 விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில்மாவட்டம் முழுவதும் 9
தாலுகா பகுதிகளிலும்சேர்த்து மொத்தம் 3 லட்சத்து 6ஆயிரத்து841விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.
இந்நிலையில் மாற்றுதிறனாளி ஓய்வூதியம்மற்றும் முதியோர் ஓய்வூதியம் பெற்று வரும் குடும்பத்தினர் களில் இந்த பயனாளிகளை தவிர அந்த குடும்பங்களில்
தகுதி வாய்ந்த பெண்கள்மற்றும் ஏற்கெனவே 2கட்டங்களில் விண்ணப்பபடிவம் வழங்காதவர்கள்ஆகியோருக்கான சிறப்பு
முகாம் மாநிலம் முழுவதும் கடந்த 18-ம்தேதி முதல் 20-ம்தேதி வரையில் நடைபெற்றது.
இதில் திருவாரூர் மாவட்டத்தில் 11ஆயிரத்து749 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அதன்படி,மாவட்டத்தில் மொத்தம்3லட்சத்து18 ஆயிரத்து 590 விண்ணப்பங்கள்
பெறப்பட்டுள்ளது. இதுமொத்த குடும்ப அட்டையில் 81.33 சதவீதம் ஆகும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்
பட்டுள்ளது. இந்நிலையில் இந்த உரிமை தொகை வழங்கும் பணி துவங்குவதற்கு குறைந்தநாட்களே இருந்து வரும்
நிலையில் விண்ணப்பகாரர்களின் ஆதார் விபரங்கள் அடிப்படையில் 4 சக்ரவாகனம் இருப்பது, ஆண்டுக்கு ரூ 2 1/2 லட்சத்திற்கு மேல் வருமானம், அரசு மற்றும்பொதுத்துறை நிறுவனஊழியர்கள், ஏற்கனவேமுதியோர் ஓய்வூதியம்
பெற்று வருபவர்கள் எனபல்வேறு வகைகளில் இந்த உரிமைத் தொகைபெறுவதற்கு தகுதியில்லா விண்ணப்பங்கள் நிராகரிக்கப் பட்டுள்ளது.
சந்தேகத்திற்கிடமான 20சதவீத விண்ணப்பங்களை மாவட்டம் முழுவதும் அலுவலர்கள் வீடு, வீடாககள ஆய்வு செய்யும் பணி
தற்போது நடைபெற்று வருகிறது. வலங்கைமான் தாலுகா பாடகச்சேரி கிராமத்தில்மாவட்ட வருவாய் அலுவலர் சண்முகநாதன்நேரில் ஆய்வு செய்தார்.
உடன் வலங்கைமான் தாசில்தார் அன்பழகன்,மண்டல துணை தாசில்தார் ஆனந்த் மற்றும் வருவாய் துறையினர் இருந்தனர்.