ஜே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர்
திருத்துறைப்பூண்டி வட்டம் , கொற்கை அரசினர் தொழிநுட்ப கல்லூரியினை மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ நேரில் பார்வையிட்டு ஆய்வு

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி வட்டம், கொற்கை அரசினர் தொழிநுட்ப கல்லூரியினை மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீநேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
கொற்கை அரசினர் தொழிநுட்ப கல்லூரியில் மின்னியல், மின்னணுவியல் ஆய்வகம், நூலகம், வகுப்பறை, கல்லூரி விடுதி மற்றும் அடிப்படை வசதிகள் குறித்தும் மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டு மாணவர்களுக்கு தேவையான வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.
பின்னர், கொற்கை கால்நடை பண்ணையினை பார்வையிட்டு, பண்ணையில் வளர்க்கப்படும் ஊம்பளசேரி வகை மாடுகள் பற்றி மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.
தொடர்ந்து, கொற்கை, கீழ கொற்கை, மேல கொற்கை ஆகிய பகுதிகளில் கலைஞரின் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் விண்ணப்பித்தவர்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று சிறப்பாய்வினை மாவட்ட ஆட்சியர் மேற்கொண்டார்.
ஆய்வில் கால்நடைபராமரிப்புத்துறையின் இணை இயக்குநர் மரு.எம்.ஹமீதுஅலி, கொற்கை அரசினர் தொழில்நுட்ப கல்லூரி முதல்வர் .காசி, திருத்துறைப்பூண்டி வட்டாட்சியர் .காரல் மார்க்ஸ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வாசுதேவன் அன்பழகன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.