வலங்கைமானில் கலைஞர் நூற்றாண்டு விழா போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு
வழங்கப்பட்டன.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில்,தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, 6-ம்வகுப்புமுதல் 9-ம் வகுப்பு வரைஉள்ள மாணவ-மாணவி
களுக்கு கட்டுரை எழுதுதல், கவிதை ஒப்பிவித்தல், பேச்சு போட்டி, விளையாட்டுப்போட்டிகள் நடத்தப்பட்டன.
இதில் வெற்றி பெற்றவர் களுக்கான பரிசளிப்பு விழாவிற்கு வட்டார வள மையம் மேற்பார்வையாளர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார், வட்டார கல்வி அலுவலர் சுகந்தி முன்னிலை வகித்தார், விழாவில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு வழங்கி
பாராட்டப்பட்டனர்.