கந்தர்வக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அக்கச்சிபட்டியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடைபெற்றது.

முதலமைச்சரின் காலை உணவு திட்டத்திற்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்திற்கு பள்ளி மேலாண்மை குழு தலைவி இலக்கியா தலைமை வகித்தார்.
பள்ளி மேலாண்மை குழு துணை தலைவி வேதநாயகி, வார்டு உறுப்பினர் கலா ராணி முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாராகஊராட்சி மன்ற தலைவர் கங்காதரன் கலந்து கொண்டு பள்ளியில் நடைபெறக்கூடிய வளர்ச்சி திட்டங்கள் குறித்தும், ஊராட்சி மூலம் பள்ளிக்கு செயல்படுத்தக்கூடிய திட்டங்கள் குறித்து பேசினார்.
தலைமை ஆசிரியர் பொறுப்பு மணிமேகலை அனைவரையும் வரவேற்றார்.
பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தில் பள்ளி செல்லா குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறன் உடைய குழந்தைகளை கண்டறிவது குறித்தும், இல்லம் தேடிக் கல்வி மையத்தில் நடைபெறும் கற்றல், கற்பித்தல் முறை குறித்தும், புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு பாராட்டு , பள்ளி வளர்ச்சி குறித்து கலந்தலோசனை செய்யப்பட்டது.
இக்கூட்டத்தில் இல்லம் தேடிக் கல்வி மையம் ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் ரகமதுல்லா, ஆசிரியர்கள் நிவின்,செல்வி ஜாய்,வெள்ளைச்சாமி பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் மற்றும் சமையல் உதவியாளர்கள் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.