ஜே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர்

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டம் பேரளம் அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 2023-2024ஆம் ஆண்டிற்கான குறுவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ மற்றும் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி.கே.கலைவாணன் ஆகியோர் பரிசுகளை வழங்கினார்கள்.

பின்னர் நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது

ஓடி விளையாடு பாப்பா, நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா என்ற பாரதியின் பாடலுக்கு ஏற்றவாறு விiளாட்டிற்கு முக்கியத்துவம் அளிக்கும் விதத்தில் கடந்த இரண்டு வருடங்களாக தமிழ்நாட்டில் பல உலக அளவிலான போட்டிகள் நடைபெற்று வருகிறது.

 இதுபோன்ற போட்டிகள் நம் நாட்டில் நடைபெறுவதனால் நமக்கான வாய்ப்பும், விளையாட்டில் நமக்கான ஆர்வமும் அதிகரித்து வருகிறது. உங்களை போன்ற இளம் மாணவர்களுக்கு விளையாட்டில் உற்சாகம் அளிக்கவே பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டுவருகிறது
 
விளையாட்டுத்துறை அமைச்சர் அவர்களின் அறிவுரையின்படி நடைபெற்ற முதலமைச்சர் கோப்பைக்கான போட்டிகளில் நமது மாவட்டத்தினை சேர்ந்த பல மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர். குறிப்பாக, சவளக்காரன் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பெண்கள் கால்பந்து போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்று வந்தனர்.

 இதுபோன்ற பல பள்ளிகளில் பல மாணவர்களின் விளையாட்டு திறனை கண்டறிந்து அவர்களுக்கான போட்டிகள் நடத்தப்பட்டு இன்றைய தினம் பரிசுகள் வழங்கப்படுகிறது. போட்டிகளில் தோல்வி அடைந்த மாணவர்கள் கலங்காது இடைவிடாது உழைத்து, இனிவரும் போட்டிகளில் வெற்றி பெற வேண்டும்.

மற்ற மாணவர்களும், பார்வையாளர்களாக மட்டுமே இல்லாமல் நீங்களும் விளையாட்டு போட்டிகளில் பங்குபெற வேண்டும். 

மேலும், மாணவர்களாகிய நீங்கள் உடல் ஆரோக்கியத்துடன் இருந்தால் மட்டுமே படிக்க முடியும், குறிப்பாக பெண் குழந்தைகள் கட்டாயம் படித்தால் மட்டுமே வாழ்வில் முன்னேற முடியும். பெண்களுக்கு இன்றைய காலகட்டத்தில் ஏற்படும் இரத்த சோகை, உடல் சோர்வு போன்றவற்றை போக்க நீங்கள் உடல் ஆரோக்கியத்துடன் பல்வேறு விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு உற்சாகத்துடன் இருக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர்.தி.சாருஸ்ரீ தெரிவித்தார்.

கால்பந்து, ஹாக்கி, வலைபந்து, கைபந்து, கோ-கோ, கபடி, துரோபந்து, ஹேண்ட்பந்து, பால் பேட்மிட்டன், டேபில் டென்னிஸ், கேரம், டென்னிஸ் தடகளம் ஆகிய விளையாட்டுகளில் குறுவட்ட அளவில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ பரிசுகளை வழங்கினார்

  நிகழ்வில், முதன்மை கல்வி அலுவலர்   அ.புகழேந்தி மாவட்ட விளையாட்டு அலுவலர்   ப.ராஜா மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் அ.ஜெயசந்திரன் பெற்றோர் ஆசிரியர் கழக துணைத்தலைவர் வே.மனோகரன் நன்னிலம் கல்வி புரவலர் எஸ்.எம்.செல்வராஜ் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் ஜெ.உதுமான்  பேரளம் பேரூராட்சி தலைவர்   கீதா நாகராஜன்  பேரளம் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் தியாகு பேரளம் பள்ளி மேலாண்மைக்குழு தலைவர்  ச.பிளோமினா, பேரூராட்சி கவுன்சிலர்  இரா.சுபத்ரா இராம்குமார்   பேரளம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் சீ.இந்திரா உள்ளிட்ட அரசு அலுவலர்கள்   உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள்  ஆசிரியர்கள்  மாணவ  மாணவியர்கள் கலந்து கொண்டனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *