ஜே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர்

திருவாரூர் மகரிஷி வித்யா மந்திர் பள்ளி மாணவர்கள் வில்வித்தை (மற்றும்) கராத்தே போட்டியில் தங்கம் வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்று சாதனை

கர்நாடக மாநிலம் பெங்களூரில் நடைபெற்ற தென்னாசிய கராத்தே போட்டிகள் நடைபெற்றது
போட்டியினை கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் டி வி சதானந்த கௌடா அவர்கள் விழாவை குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்து வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்கள்,போட்டிகளில் திருவாரூர் மகரிஷி வித்யா மந்திர் சி பி எஸ் இ பள்ளி மாணவர்கள் 4 வெள்ளி பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர்.

பெங்களூரில் நடைபெற்ற கராத்தே போட்டியில் கயவலன்
12 வயதுக்குட்பட்ட(கட்டா மற்றும் குமுத்தே)தமிழியன் 10வயதுக்குட்பட்ட(கட்டா மற்றும் குமுத்தே)இரு மாணவர்களும்
4 வெள்ளிப் பதக்கங்களை வென்றனர்

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றசர்வதேசவில்வித்தைபோட்டியில் 14வயதுக்குட்பட்ட இந்தியன் வில் பிரிவில்
மகரிஷி வித்யா மந்திர் பள்ளி பயிலும் 6 வகுப்பு மாணவன் ஹர்திக் ராமன் முதலிடம் பெற்று கோப்பையினை கைப்பற்றினார்,மதுரையில்மதுரா கல்லூரியில் நடைபெற்ற மாநில அளவிலான வில்வித்தை போட்டியில்கயலவன் வெண்கலப் பதக்கம், அபிஷேக், தங்கப்பதக்கமும், ஹர்திக் ராமன், தங்கப்பதக்கம்,.நவீன் குமார், வெள்ளி பதக்கமும்
.முகேஷ் குமார் வென்கலப் பதக்கமும்,மற்றும் கோப்பை சான்றிதழ்களை பெற்று வெற்றி பெற்றார்கள்,தமிழகத்திற்கு பெருமை சேர்க்கும் விதமாக போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களை திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டிபி சுரேஷ் குமார் மாணவர்களை நேரில் அழைத்து தமது வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார்.
மேலும் வெற்றி பெற்றமாணவர்களையும் மற்றும் வில்வித்தை மற்றும் கராத்தேபயிற்சியாளர் மாஸ்டர்.குணசேகரன் அவர்களை திருவாரூர்நேதாஜி கல்வி குழுமம் மற்றும் மகரிஷி வித்யா மந்திர் பள்ளியின் தலைவர், தாளாளர் டாக்டர் வெங்கட்ராஜுலு, செயலர் சுந்தர்ராஜ் மற்றும் முதன்மை செயல் அதிகாரி நிர்மலா ஆனந்த் மற்றும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் கல்விக் குழுமத்தின் இயக்குனர்(மற்றும்) மகரிஷி வித்யா மந்திர் சிபிஎஸ் இ பள்ளியின் தாளாளர் விஜய சுந்தரம்,பள்ளியின் முதல்வர் ரமா பிரபா, பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் பெற்றோர்கள் மேலும் பொதுமக்கள் மற்றும் மாணவ. மாணவிகள் என அனைவரும் தங்களது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்து கொண்டார்கள்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *