நாமக்கல் மாவட்டம்
திருச்செங்கோடு விவேகானந்த கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில் 25-வதுபட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது.
இவ்விழாவிற்கு விவேகானந்தா மகளிர் கல்வி நிறுவனங்களின் நிறுவனர், தாளாளர், மற்றும் செயலர் டாக்டர் மு. கருணாநிதி தலைமை தாங்கினார்.
கல்லூரியின் முதல்வர்கள் டாக்டர் ராஜேந்திரன்,டாக்டர் பேபி ஷகிலா ஆகியோர் கல்லூரியின் நிகழ்வுகள் குறித்தும் , சிறப்பு விருந்தினர்களை வரவேற்றும் பேசினார்
இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக நியூ டெல்லி இருந்து வந்த இந்திய அறிவியல் மற்றும் தொழில் நுட்ப அமைச்சகத்தின் உயிரியியல் தொழில்நுட்பத் துறை,
எஃப் பிரிவு விஞ்ஞானி டாக்டர். கரிமாகுப்தா மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி பேசினார் அப்போது அவர் பேசியதாவது:-
இன்று இந்த பட்டமளிப்பு விழாவில் பட்டம் பெறும் இளங்கலை மற்றும் முதுகலை மாணவிகள் அனைவரும் வாழ்வில் உங்களுக்கென்று ஒர் இலக்கை நிர்ணயித்து அதை நோக்கியே உங்கள் பயணம் இருக்க வேண்டும் .
பெற்றோர்கள் தங்கள் மகள் அந்த இலக்கை அடைய வெளி மாநிலங்கள், வெளி நாடுகளுக்கு செல்ல அவர்களுக்கான சுதந்திரமான சூழலை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.
மேலும் பட்டம் பெறும் மாணவிகள் அனைவரும் விஞ்ஞானம் சார்ந்த ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
நம் பாரத பிரதமர் நரேந்திர மோடி சொன்னது போல் நம்முடைய படிப்பு மற்றவர்களுக்கும், நம் நாட்டிற்கும் பயன்பட வேண்டும் என்று விஞ்ஞானி டாக்டர். கரிமாகுப்தா கேட்டுக்கொண்டார்
மேலும் அவர் 20 ,21 – 2022 கல்வியாண்டில் தேர்ச்சி பெற்ற 20 துறை சார்ந்த முதல் இடம்பிடித்த மாணவிகளுக்கு பதக்கமும் 1040 மாணவிகளுக்கு பட்டங்களையும் வழங்கினார்.
இந்த பட்டமளிப்பு விழாவில் 2000 க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் கலந்து கொண்டு தங்கள் மகள்களின் கனவு நிறைவேறியதை கண்டு பெருமிதமும் உளமார மகிழ்ச்சியும் அடைந்தனர்.
இந்த விழாவில் துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.