நாமக்கல்
நாமக்கல் மாவட்டத்தில் 65 மையங்களில் புதிய பாரத எழுத்தறிவு திட்டம் தொடங்கப்பட்டது
அதில் ஒரு மையமாகநாமக்கல்லில் உள்ள ராமாபுரம்புதூர் நகராட்சி நடுநிலைப் பள்ளியில்புதிய பாரத எழுத்தறிவு திட்டம் தொடங்கப்பட்டது.
தொடக்க விழாவை இப்பள்ளியின் தலைமை ஆசிரியை மா.ஆதிலட்டசுமிகுத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்வட்டார வள மைய ஆசிரிய பயிற்றுநர் கோகிலா முன்னிலை வகித்து பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கம் புதிய பாரத எழுத்தறிவு திட்டம் (2022-2027) பற்றி விளக்கி சிறப்புரை ஆற்றினார்.
இந்த மையத்தை நடத்தி வரும் தன்னார்வலர் ரோகிணி மையத்தின் நோக்கம் குறித்தும், செயல்பாடுகள் குறித்தும் விளக்கமாக எடுத்துரைத்தார்இதில் 15 வயதிற்கு மேற்பட்ட முற்றிலும் எழுத, படிக்க, அனைவருக்கும்எண்ணறிவையும் எழுத்தறிவையும், வாக்காளர் உரிமை, சுற்றுச்சூழல் அறிதல், பணம் இல்ல பரிமாற்றம், இணைய வழி கல்வி, ஆகியவை குறித்து விளக்கமாக எடுத்துரைத்தார்.
விழாவில் பள்ளி ஆசிரியர்கள் , புதிய பாரத எழுத்தறிவு திட்ட பொறுப்பாளர்கள், மற்றும் பெற்றோர்கள், உட்பட பலர் கலந்து கொண்டனர்.