தென்காசி மாவட்டம் ஆலங்குளம் வட்டாரம் நெட்டூர் தொகுதி, சோலைசேரியில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில் ஊட்டசத்து மாத விழா வெகு விமர்சியாக நடைப்பெற்றது.
ஆலங்குளம் ஒன்றிய குழு தலைவர் எம் திவ்யா மணிகண்டன் தலைமை தாங்கி குத்துவிளக்கு ஏற்றிவைத்து
ஊட்டசத்து மாத விழா தொடங்கி வைத்து கர்ப்பிணி பெண்கள், மற்றும் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து மிக அவசியம் என்பது பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார்
வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் மங்களநாயகி, வரவேற்புரை வழங்கினார்.
ஒன்றிய கவுன்சிலர் சோலைசேரி கிருஷ்ணம்மாள் வெங்கடேஸ், முன்னிலை வகித்தார் இவ்விழாவில் குழந்தைகளின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் அங்கன்வாடி பணியாளர்களின் ஊட்டச்சத்து விழிப்புணர்வு நடனம் நடைப்பெற்றது.
இந்த விழாவில் வட்டார மேற்பார்வை யாளர்கள் ஆனந்த லெட்சுமி, பழனியம்மாள்,வீராணம் கருவந்தா கிராம சுகாதார செவிலியர் லூர்து மேரி, மக்களை தேடி மருத்துவ பணியாளர் சங்கீதா, சேலைசேரி வெங்கடேஸ்,முருகையா, முத்தையா, நாட்டாமை நடராஜன், முன்னாள் வார்டு உறுப்பினர் செல்லையா, மற்றும்அங்கன்வாடி பணியாளகள் மற்றும் உதவியாளர்கள்,கர்பிணி பெண்கள் பெற்றோர்கள் குழந்தைகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.