பா வடிவேல் அரியலூர் செய்தியாளர்

ஜெயங்கொண்டத்தில் தமிழ் தேச விடுதலை போராளிகள் பொன்பரப்பி தியாகி தமிழரசனின் 36ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் மார்கெட் கமிட்டி பகுதியில் தமிழ் அன்னை இல்லம் வளாகத்தில் பொன்பரப்பி தியாகி தமிழரசனின் 36 ஆம் ஆண்டு நினைவு வீரவணக்க நாள் தமிழர் நீதி கட்சியின் தலைவர் சுபா இளவரசன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இதில் தியாகி தமிழரசனின் தங்கை அன்பழகி தமிழர் நீதி கட்சியின் மகளிர் அணி தலைவி கவியரசி இளவரசன் சி மதியழகன் மாவட்ட செயலாளர் பாக்யராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் மாநில செய்தி தொடர்பாளர் இரா. மணிவண்ணன் வரவேற்புரை ஆற்றினார்

தமிழ் மண்ணுரிமை இயக்கத்தின் தலைவர் பேராசிரியர் ஜெயராமன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு வீரவணக்கம் செலுத்தி பேருரை ஆற்றினார். தமிழர் நீதி கட்சியின் துணைத் தலைவர் தங்கத்தமிழன் வழக்கறிஞர் கோபாலகிருஷ்ணன் மாநில பொருளாளர் பெ. ராமசாமி தமிழ் களம் அரங்கநாதன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

நிகழ்ச்சியின் தொடக்கமாக தீப சுடர் ஏற்றி தியாகி தமிழரசன் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தினர்

பின்னர் பேசிய தமிழர் நீதி கட்சியின் தலைவர் சுபா இளவரசன் மதகளிர் மாணிக்கம் கிராமத்தில் உள்ள தியாகி பொன்பரப்பி தமிழரசன் சமாதியில் மலரஞ்சலி செய்வதற்கு அனுமதி தராத காவல்துறை மற்றும் தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுத்தார்.

இதில் மதகளிர் மாணிக்கம் கிராமத்தில் தியாகி தமிழரசனுக்கு அனைத்து தமிழ் அமைப்புகளையும் ஒன்று சேர்த்து சிலை அமைக்கப்படும் என்று சூளுரை விடுத்தார்

இந்நிகழ்ச்சியில் சேலம் மாவட்ட செயலாளர் மா கண்ணன் கடலூர் மாவட்ட அமைப்பாளர் ரத்தின உமாசங்கர் தஞ்சாவூர் மாவட்ட செயலாளர் துரை செல்வம் பெரம்பலூர் மாவட்ட செயலாளர் சந்திரசேகர் காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் வி ரபேல் திருச்சி மாவட்ட செயலாளர் கண்ணன் ஒன்றிய செயலாளர்கள் அறிவழகன் செந்தில் குமார் பாலையா நடேசன் சங்கரன் பிச்சைமுத்து கலியமூர்த்தி மற்றும் 100க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்

நிகழ்ச்சியின் நிறைவாக ஜெயங்கொண்டம் நகர செயலாளர் மா கருணாநிதி நன்றி உரையாற்றினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *