108 வாகன செயல்பாடுகளை நேரில் அறிந்த மாணவர்கள்

இரு சக்கர வாகனத்திலும் 108 வந்து விட்டது – பைக் ஆம்புலன்ஸ்108 வாகனத்தின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறலாம்

குழந்தைகளுக்கான ஆம்புலன்ஸ் உட்பட நான்கு வகையான ஆம்புலன்ஸ் செயல்பாட்டில் உள்ளதுபாம்பு கடித்தால் வாயில் உறிஞ்சி ரத்தம் எடுப்பது தவறானது 108 வாகன பொறுப்பாளர் தகவல்

தேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் 108 வாகனம் செயல்பாடு தொடர்பாக நேரில் விளக்கப்பட்டது.
ஆசிரியர் ஸ்ரீதர் வரவேற்றார்.தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.108 ஆம்புலன்ஸிற்கான சிவகங்கை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சிவா முன்னிலை வகித்தார்.

தேவகோட்டை 108 வாகன பொறுப்பாளர்கள் தினேஷ் மணி,பிரியங்கா, மருது பாண்டியன் , மதியழகன் ஆகியோர் முதலுதவி தொடர்பாக மாணவர்களிடம் பேசுகையில், 108 தொடர்பான விழிப்புணர்வு மக்களிடம் இன்னும் அதிகம் போய் சேர வேண்டும்.மாணவர்களாகிய நீங்கள்தான் அதிகம் 108 குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.108 என்ற எண்ணுக்கான தொலைபேசி தொடர்பு இலவசம்தான்.இதன் கண்ட்ரோல் சென்னையில்தான் உள்ளது .

அலைபேசி மூலம் தொடர்பு கொண்டதும் எந்த மாவட்டமாக எங்கே இருந்தாலும் 10 நிமிடத்தில் சேவை கிடைக்க வாய்ப்புள்ளது.எல்லா விஷயத்துக்கு போன் பண்ணலாம்.

தீக்காயம்,பிரசவம்,காய்ச்சல்,பாம்பு கடித்தல் போன்ற அனைத்துக்குமே தொடர்பு கொள்ளலாம்.பாம்பு கடித்தல் , தீக்காயம் , காய்ச்சல்,வலிப்பு,கீழே விழுதல் போன்ற விபத்துகளில் எவ்வாறு  முதலுதவி செய்வது என்பதை நேரடி செயல் விளக்கம் மூலம் விளக்கினார்கள். 

108 வாகனத்தில்   என் கே 48 திட்டத்தின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகளில் 48 மணி நேரத்திற்கு சிகிச்சை பெற  அனுமதிக்கப்படுவார்கள் என தகவல் தெரிவித்தனர். 

                          தற்போது மாவட்ட தலைநகரங்களில் பைக் ஆம்புலன்ஸ் செயல்படுத்தப்பட்டு வருகிறது. குழந்தைகளுக்கான ஆம்புலன்ஸ், செயற்கை சுவாச உபகரணங்கள் கொண்ட ஆம்புலன்ஸும் தற்போது செயல்பாட்டில் உள்ளது.   

                                   பள்ளி மாணவர்கள் சொர்ணமேகா, ஜெயஸ்ரீ, கனிஷ்கா, யோகேஸ்வரன், பிரிஜித், சுபிக்ஷன்  ஆகியோரின் சந்தேகங்களுக்கு  பதில் அளித்தனர்.நிறைவாக ஆசிரியை முத்துமீனாள்   நன்றி கூறினார். ஏராளமான பெற்றோர்களும் இந்நிகழ்வில் பங்கேற்று 108 வாகனத்தை பார்வையிட்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *