கோவையை சேர்ந்த நான்கு வயது சிறுமி நிகிதா கதை புத்தகங்கள் வாசித்து உலக சாதனை

கோவையை சேர்ந்த நான்கு வயது சிறுமி தொடர்ந்து மூன்று மணி நேரம் ஆங்கில கதை புத்தகங்கள் படித்து நோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்து அசத்தியுள்ளார்..

கோவைபுதூர் பகுதியை சேர்ந்த முருகேசன்,நதியா தம்பதியனரின் இளைய மகள் நிகிதா மெலிசா.நான்கே வயதே ஆன நிகிதா தற்போது எல்.கே.ஜி.வகுப்பு செல்ல துவங்கியுள்ளார்.

இந்நிலையில் இந்த வயது குழந்தைகள் ஆங்கில எழுத்துக்களான ஏ.பி.சி.படித்து வரும் நிலையில் ஆங்கில புத்தகங்களை பிழையில்லாமல் படித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.இவரது திறமையை கண்ட பெற்றோர் அளித்த முறையான பயிற்சியை தொடர்ந்து குழந்தை நிகிதா சிறார்களுக்கான ஆங்கில கதை புத்தகங்களை தொடர்ந்து மூன்று மணி நேரம் வாசித்து நோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தார்.

உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நிகிதாவிற்கு நோபல் உலக சாதனை புத்தகத்தின் பதிப்பாளர் தியாகு நாகராஜ் மற்றும் தீர்ப்பாளர் நரேந்திரன் ஆகியோர் சான்றிதழ்,மற்றும் பதக்கங்களை வழங்கி கவுரவித்தனர்..

இது குறித்து இவரது தாயார் நதியா கூறுகையில், ஒன்றரை வயதிலேயே ஓவிய அட்டைகளை சரியாக கூறி உலக சாதனை செய்துள்ளதாக கூறிய அவர்,சரியான முறையில் குழந்தை முதலே பயிற்சி அளித்தால் ஐந்து வயதிலேயே சரளமாக குழந்தைகளால் புத்தகங்கள் படிக்க இயலும் என தெரிவித்தார்.மழலை குரலில் ஆங்கில கதை புத்தகங்களை படித்து அசத்தும் சிறுமியின் இந்த சாதனையை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *