நாமக்கல்

உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் மாநில தலைவர் ஆர். வேலுச்சாமி ஒரு அறிக்கை வெளியிட்டு உள்ளார் அந்த அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளதாவது:-

தமிழ்நாடு அரசு 2023 நில ஒருங்கிணைப்பு சட்டம்
கொண்டு வந்துள்ளதால் – தமிழக விவசாயிகளுக்கு எதிராக பாதிப்பை ஏற்படுத்தும் விதமாக உள்ளதால் – 2023 நில ஒருங்கிணைப்பு சட்டம் தமிழ்நாடு அரசு திரும்ப பெற கோரி – உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடருவது குறித்து அறிக்கை

தமிழ்நாடு அரசு கடந்த ஏப்ரல் மாதம் 23-ந்தேதி சட்டமன்ற கூட்டத் தொடரில் 2023 நில ஒருங்கிணைப்பு சட்டம் கொண்டு வந்து சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது.

2023 நில ஒருங்கிணைப்பு சட்ட மசோதாவை அனுமதி பெறுவதற்காக தமிழ்நாடு சார்பாக தமிழ்நாடு ஆளுநர் அவர்களுக்கு அனுப்பப்பட்டது. தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் 2023 நில ஒருங்கிணைப்பு சட்டத்திற்கு ஒப்புதல் கொடுத்துள்ளார். 2023 நில ஒருங்கிணைப்பு சட்டத்தை கடந்த ஆகஸ்ட் 17-ந்தேதி அரசு இதழில்

தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது தமிழ்நாடு அரசு சிறப்பு திட்டம் என்ற பெயரில் தமிழக விவசாயிகள் பயிர் செய்யும் பல்லாயிர கணக்கான விளைநிலங்கள் அதன் சுற்றியுள்ள குளங்கள், ஏரிகள், பாசன கால்வாய்கள் மற்றும் நீர்வழி பாதைகள் அனைத்தும் விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் கட்டுப்பாட்டில் உள்ள நிலம் கருத்து கேட்காமல் தமிழ்நாடு அரசு கையகப்படுத்துவதற்கு 2023 நில ஒருங்கிணைப்பு சட்டம் பொருந்தும் வகையில் உள்ளது.

இதனால் தமிழக விவசாயிகள் விவசாயம் செய்யும் விளைநிலம் உள்ள பகுதியில் தமிழ்நாடு அரசின் சிறப்பு திட்டம் என்று எதிர்காலத்தில் உருவாக்கப்பட்டால் விவசாயம் செய்யும் விவசாயிகளின் விளைநிலம் முற்றிலும் அழிந்துவிடும்.

கடந்த ஏப்ரல் மாதம் 23-ந்தேதி அன்று நடைபெற்ற சட்டமன்ற கூட்டத் தொடரில் 2023 நில ஒருங்கிணைப்பு சட்ட மசோதா சட்டம் நிறைவேற்றப்பட்ட பின்பு உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பாக 2023 நில ஒருங்கிணைப்பு சட்ட மசோதா தமிழக விவசாயிகளுக்கு எதிராக உள்ள சட்டம் என்பதால் இச்சட்டத்தை திரும்ப பெற கோரி பலமுறை தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை வைத்தும் தமிழ்நாடு அரசு 2023 நில சீர்திருத்த மசோதாவை திரும்ப பெறுவது குறித்து எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ஆகவே தமிழ்நாடு அரசு கொண்டுவந்த 2023 நில ஒருங்கிணைப்பு சட்டம் தமிழக விவசாயிகளுக்கு மிக ஆபாத்தான சட்டமாகும். தமிழக விவசாயிகளை இந்த சட்டம் முழுமையாக பாதிக்கும் வகையில் உள்ளது.

தமிழ்நாடு அரசு 2023 நில ஒருங்கிணைப்பு சட்டம் கொண்டு வந்ததை தமிழ்நாடு அரசு திரும்ப பெற கோரி உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்பதை அறிக்கையின் மூலம் தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் மாநில தலைவர் ஆர். வேலுச்சாமி தெரிவித்து உள்ளார்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *