புதிய பாரத எழுத்தறிவுத் திட்டத்தில் 16,984 பேருக்கு கல்வி
பள்ளி சாரா கல்வி இயக்குநர் பழனிச்சாமி தகவல்…
மதுரை அரசு நடுநிலைப்பள்ளியில் எழுத்தறிவு திட்டம் துவக்கம் மதுரை கிழக்கு ஒன்றியம் அரசு நடுநிலைப்பள்ளி கொடிக்குளத்தில் புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம் துவக்க விழா வட்டாரக் கல்வி அலுவலர் எஸ்தர் ராணி தலைமையில் துவங்கியது.
வட்டார வள மைய மேற்பார்வையாளர் ரவிகணேஷ், தலைமையாசிரியை சம்பூர்ணம், ஆசிரியர் பயிற்றுனர்கள் லதா மற்றும் பானு , வார்டு உறுப்பினர் சந்தானலெட்சுமி,
திட்ட தன்னார்வலர் அன்னலெட்சுமி,பள்ளி மேலாண்மை தலைவர் சத்யா,மற்றும்ஆசிரியர்கள், கற்போர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மதுரை புதிய பாரத எழுத்தறிவு திட்ட சுற்றல் மையங்கள் மூலம் 16948 பேருக்கு கல்வி வழங்கப்படவுள்ளது என பள்ளி சாரா, வயது வந்தோர் கல்வி இயக்குநர் மு.பழனிச்சாமி தெரிவித்ததாவது:
தமிழகத்தில் 2011-ம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பை அடிப்படையாகக் கொண்டு, 15 வயதுக்கு மேற்பட்ட, முற்றிலும் எழுதப் படிக்கத் தெரியாதவர்களுக்கு அடிப் படை எழுத்தறிவுக் கல்வி வழங்கும் வகையில், புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம் என்ற 5 ஆண்டுத் திட்டம் அனைத்து மாவட்டங்களிலும் செயல் படுத்தப் படுகிறது.
தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலை உயர் நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 26.349 கற்றல் மையங்கள் அமைக்கப்பட்டன. 26,385
தன்னார்வலர்கள் அடிப்படை எழுத்தறிவுக் கல்வியைக் கற்பிக்கும் பணிகளில் ஈடுபட உள்ளனர்.
இந்த மையங்களில், பள்ளி வேளை நாள்களில், மாலை வேளையில், 2 மணி நேரம் வீதம் செப்டம்பர் முதல் வருகிற பிப்ரவரி மாதம் வரை 6 மாத காலத்திற்கு 2,000 மணி நேரம் கற்பித்தல் கற்றல் செயல்பாடுகள் நடைபெறும் மதுரை மாவட்டத்தில் 15 ஒன்றியங்களிலும் புதிய பாரத எழுத் தறிவுத் திட்ட கற்றல் மையங்கள் தொடங்கப்பட்டுள்ளது. இந்த மையங்களில் 16,984 பேருக்கு எழுத்தறிவு, எண்ணறிவு வாழ்வி யல் திறன் சார்ந்த கல்விகள் வழங்கப்பட உள்ளன என்றார்.