கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி வட்டத்தின் வட்டாட்சியராக பணியாற்றி வந்த எம்.அனிதா தனி மாவட்ட வருவாய் அலுவலரின் நேர்முக உதவியாளராக பணி மாறுதலாகி செல்லும் நிலையில் அஞ்செட்டி வட்டத்தின் வட்டாட்சியராக பணியாற்றி வந்த மோகன் போச்சம்பள்ளி வட்டாட்சியர் அலுவலகத்தில் 51 வது வட்டாட்சியராக இன்று காலை பொறுப்பேற்றுக் கொண்டார்.
இவருக்கு தலைமையிடத்து துணை வட்டாட்சியர் சகாதேவன், துணை வட்டாட்சியர் பரமேஸ்வரி, தேர்தல் துணை வட்டாட்சியர் பாரதி, வட்ட வழங்கல் அலுவலர் சுரேந்திரன், வருவாய் ஆய்வாளர்கள் கார்த்திகேயன், சங்கர், கவிதா, உஷா, முதுநிலை வருவாய் ஆய்வாளர்கள் புஷ்பா, சுஜிமதி, கோவிந்தராஜ், கிரண்குமார், தேன்மொழி, கிராம நிர்வாக அலுவலர்கள் பழனிவேல், கௌரிசங்கர், சுதாகர், ராஜா, சத்திநாராயனன், அருண்குமார், பதிவரை எழுத்தர் நாகராஜ், அலுவலக உதவியாளர்கள் கண்ணன், ஸ்ரீதர் மற்றும் அலுவலக உதவியாளர்கள் உள்ளிட்டோர் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.