ஜே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர்
தமிழக முதலமைச்சர் காணொளி காட்சி வாயிலாக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் குறைந்த அளவு பரப்பில் வேளாண்மையில் ஈடுபடும் விவசாயிகள் சிறிய வளை வேளாண் இயந்திரங்களை கொண்டு உழவுப்பணிகள் மற்றும் இதர வேளாண் பணிகளை மேற்கொள்ள ஏதுவாக 3907 விவசாயிகளுக்கு ரூ.35 கோடி ரூபாய் மதிப்பிலான பவர்டில்லர்கள் மற்றும் விசை களையெடுப்பான் கருவிகளை வழங்கி தொடங்கி வைத்துள்ளார்கள்

தமிழக முதலமைச்சர் அவர்கள் காணொளி காட்சி வாயிலாக சென்னையிலிருந்து வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் குறைந்த அளவு பரப்பில் வேளாண்மையில் ஈடுபடும் விவசாயிகள் சிறிய வளை வேளாண் இயந்திரங்களை கொண்டு உழவுப்பணிகள் மற்றும் இதர வேளாண் பணிகளை மேற்கொள்ள ஏதுவாக தமிழ்நாடு முழுவதும் உள்ள 3907 விவசாயிகளுக்கு ரூ.35 கோடி ரூபாய் பவர்டில்லர்கள் மற்றும் விசை களையெடுப்பான் கருவிகளை வழங்கி தொடங்கி வைத்துள்ளார்கள் நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர்.தி.சாருஸ்ரீ தலைமை வகிக்க, நாகை நாடாளுமன்ற உறுப்பினர் எம்.செல்வராஜ் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி.கே.கலைவாணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அதனடிப்படையில், திருவாரூர் மாவட்டத்தில் 166 விவசாயிகளுக்கு .141.1 லட்சம் மதிப்பீட்டில் பவர்டில்லர்கள் மற்றும் விசை களையெடுப்பான கருவிகள் வழங்கப்படவுள்ளது.
இதில் முதற்கட்டமாக, ( 04.09.2023 ) இருபது விவசாயிகளுக்கு தலா ரூ.85 ஆயிரம் மானியத்துடன் கூடிய ரூ.17 லட்சம் மதிப்பிலான பவர் டில்லர்களை மாவட்ட ஆட்சியர்.தி.சாருஸ்ரீ நாகை நாடாளுமன்ற உறுப்பினர் .எம்.செல்வராஜ் மற்றும் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி.கே.கலைவாணன் ஆகியோர் வழங்கினார்கள்.
நிகழ்ச்சியில், வேளாண்மை இணை இயக்குநர் லட்சுமிகாந்தன் மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் கலியபெருமாள், ஒன்றியக்குழு தலைவர் தேவா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை).ஏழுமலை, உதவி பொறியாளர்கள் முருகன் அன்னதாசன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.