எஸ். செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி

சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவிலில் பன்னாட்டு லயன் சங்கத்தின் சார்பாக நடைபெற்ற ஆசிரியர் தின விழா தனியார் பள்ளி கணினி அறிவியல் ஆசிரியருக்கு ஞான சிற்பி விருது வழங்கி பாராட்டு.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த வைத்தீஸ்வரன் கோவிலில் பன்னாட்டு லயன் சங்கத்தின் சார்பாக மாவட்ட ஆசிரியர் தின விழா மற்றும் விருது வழங்கும் விழா நடைபெற்றது. மாவட்டத் தலைவர் என்.மோகன்ராஜ் தலைமையில் நடைபெற்ற விழாவினை மாவட்ட ஆளுநர்
PMJF Lion எம் இமயவரம்பன் துவக்கி வைத்து விருது வழங்கினார்,

சிறப்பு விருந்தினராக மருத்துவர் வீரபாண்டியன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். கௌரவ விருந்தினராக மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஏபி மகாபாரதி அவர்கள் கலந்து கொண்டு விருது பெற்றவர்களுக்கு வாழ்த்துரை வழங்கினார்.

இந்நிகழ்வில் திருச்சி மண்டலத்திற்கு உட்பட்ட 276 ஆசிரியர்களுக்கு பல்வேறு பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கப்பட்டது.இதில் சீர்காழி விவேகானந்தா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் கடந்த 15 ஆண்டுகளாக கணினி அறிவியல் பிரிவில் மாணவ,மாணவிகளை 100% தேர்ச்சியை பெறவைத்த கற்றல் கற்பித்தல் பிரிவில் சாதனை படைத்த ஆசிரியை மலர்விழி வெங்கட்ராமன் அவர்களுக்கு “ஞான சிற்பி” விருது வழங்கப்பட்டது.

பன்னாட்டு லயன் சங்கத்தின் மாவட்ட ஆளுநர் PMJF Lion
எம்.இமயவரமன் அவர்கள் விருதினை வழங்கி பொன்னாடை அணிவித்து கௌரவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *