பா வடிவேல் அரியலூர் செய்தியாளர்
உடையார்பாளையம் அருகே ஆடு திருடிய புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த மூன்று பேரை உடையார்பாளையம் போலீசார் கைது செய்து ஆடு கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனத்தையும் பறிமுதல் செய்துள்ளனர்.
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அடுத்த விக்கிரமங்கலம் பகுதிகளில் கடந்த சில நாட்களாக ஆடுகள் மர்மமான முறையில் திருடப்பட்டு அதன் காரணமாக ஆட்டின் உரிமையாளர்கள் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்திருந்தனர்.
அதன் தொடர்ச்சியாக அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ் கான் அப்துல்லா அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் ஜெயங்கொண்டம் காவல் துணை கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன் ஆலோசனையின் படி உடையார்பாளையம் காவல் உதவி ஆய்வாளர் திருவேங்கடம் தலைமையில் ஜெயங்கொண்டம் குற்றப்பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் பழனிவேல் மற்றும் மணிவண்ணன் மணிமொழி ஸ்ரீநாத் அடங்கிய ஐந்து பேர் கொண்ட தனிப்படை அமைத்து போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர்
இந்நிலையில் ஆடு திருடர்கள் புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக் கோட்டை பகுதியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததின் பேரில் ஆடு திருடிய மூன்று பேரையும் சுற்றி வளைத்து கோழியை அமுக்குவது போல் லபக் என்று அமுக்கி பிடித்தனர்.
போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் ஆடு திருடர்கள் புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக் கோட்டை பகுதியை சேர்ந்த அழகப்பன், முருகேசன் மற்றும் தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு பகுதியைச் சேர்ந்த மகேந்திரவர்மன் என தெரியவந்தது.
இவர்களிடமிருந்து ஆடு திருடுவதற்கு பயன்படுத்திய இனோவா கார் மற்றும் 19 ஆடுகள் இவர்களிடமிருந்து மீட்கப்பட்டன. மேலும் ஆடு மட்டும்தான் திருடி வந்தனரா அல்லது வேறு ஏதாவது அசம்பாவித செயல்களில் ஈடுபட்டனரா என குற்றவாளிகளை கிடிக்குப்பிடி விசாரணையில் விசாரித்து வருகின்றனர்.
இந்த சம்பவத்தால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.